Home> Health
Advertisement

Brain Booster Foods: உடலாரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் உணவுகள்

Super Foods To Boost Memory: மூளையை கூர்மையாக வைத்து மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்கச் செய்யும் உணவுகள் இவை... இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் புத்தி கூர்மையாகும்
 

Brain Booster Foods: உடலாரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் உணவுகள்

ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன ஆரோக்கியம் மற்றும் மூளையின் நினைவுத்திறன் உட்பட பல பரிணாமங்களை அடக்கியது. நினைவாற்றல் மற்றும் மூளை சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை கூர்மையாவது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மூளைக்கு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவை, இது மூளை செல்களை உருவாக்க உதவுகிறது மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மூளைக்கான உணவுகள்

உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் காரணமானது நாம் உண்ணும் உணவுகளே. எனவே சத்தான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.

மூளை சக்தி உணவு
மூளை ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்கள் உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும். எனவே மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

மூளையை கூர்மைப்படுத்தும் உணவுகள்
பொதுவாக, எந்தவொரு நபரின் கூர்மையான மனமும் அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பொறுத்தது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் நினைவாற்றலும் மேம்படும்.

மேலும் படிக்க | தண்ணீர் குடிக்கும்போது இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க!
 
அக்ரூட் பருப்புகள்
வால்நட்ஸ் மூளைக்கு மிகவும் ஆரோக்கியமானது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. வால்நட் சாப்பிடுவதால் மூளையின் வேலை திறன் அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கும். வைட்டமின் ஈ, தாமிரம், மாங்கனீசு போன்ற மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் இருக்கின்றன.
 
சோயா பொருட்கள்
பாலிபினால்களின் குறைபாடு நினைவாற்றலைப் பாதிக்கும். சோயா பொருட்களில் ஐசோஃப்ளேவோன்ஸ் எனப்படும் பாலிபினால்கள் உள்ளன. இந்த இரசாயனங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன மற்றும் மூளை உட்பட உடல் முழுவதும் ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவலாம்.
 
பூசணி விதைகள்
மூளை ஆரோக்கியமாக இருக்க பூசணி விதைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். துத்தநாகம் இதில் உள்ளது, நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை வளர்க்க குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

மேலும் படிக்க | சம்மரை சமாளிக்க உதவும் முலாம் பழம்... ஜில் ஜில் கூல் கூல் நன்மைகள் இதோ!

சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் கோகோ உள்ளது, இதில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. மூளை ஆரோக்கியத்திற்கு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேவைப்படுகின்றன. அவை நினைவகத்தை பராமரிக்கவும் மூளை நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

பெர்ரி
பெர்ரிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்டுகள் மூளை செல்களை வலுப்படுத்தி, மூளையின் ஆற்றலை அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றையும் கொடுக்கலாம்.

மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுடன், இனி இந்த விஷயமும் இலவசமாகக் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More