Home> Health
Advertisement

வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

Vitamin E Facts: ஆரோக்கியத்தை அளிக்கும் விட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால் சோர்வு பலவீனம் ஏற்படும்... வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம் 

வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான சத்து. ஆகும். இந்த வைட்டமின் குறைபாடு சோர்வு, பலவீனம் என தினசரி வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், வைட்டமின் ஈ குறைபாட்டைப் போக்கும் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். ஆரோக்கியமாக இருப்பதற்கு இரும்பு, கால்சியம், புரதம் தேவைப்படுவது போலவே, வைட்டமின் ஈயும் மிகவும் அவசியம். இந்த விட்டமின் குறைந்துபோனால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். வைட்டமின் ஈ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.

இது மனித உடலால் பயன்படுத்தப்படும் ஆல்பா-டோகோபெரோல் ஆகிய வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால், முடி, தோல், மார்பகம், எலும்புகள் உட்பட உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும். கல்லீரலில் பிரச்சனையையும் அதிகரிக்கும் இந்த வைட்டமின் செறிந்த உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.

fallbacks

வைட்டமின் ஈ குறைபாடு  

வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் இதய தமனிகளில் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது.

எவ்வளவு வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ள வேண்டும்?

உடலில் வைட்டமின் ஈ சத்து குறைவதால், தசை பலவீனம், நடப்பதில் சிரமம், கை, கால் மரத்துப்போதல், பார்வை தொடர்பான பிரச்னைகள் போன்றவை ஏற்படும். இதனுடன் மார்பகம் தொடர்பான பிரச்சனையும் ஏற்படலாம். பெண்கள் வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் 15 மி.கி வைட்டமின் ஈ தேவைப்படுகிறது.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

தசைகள் பலவீனம், சோர்வு

வைட்டமின் ஈ குறைபாடு ஏற்பட்டால், தசைகள் பலவீனமாகலாம். நடக்க சிரமப்படும் நிலை உருவாவது, கைகளும் கால்களும் மரத்துப் போவது மற்றும் கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது என, தினசரி வாழ்க்கையை பாதிக்கும் பல பாதிப்புகள் ஏற்படும்.

தோல் பிரச்சனைகள்

வைட்டமின் ஈ  குறைபாட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ குறைபாட்டால் சருமம் சேதமடையாமல் தடுக்க, பாதாம் மற்றும் வேர்க்கடலையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலை சாப்பிடுவது விட்டமின் ஈ சத்து குறைபாட்டைத் தவிர்க்கச் செய்யும். ஒரு நாளைக்கு 5-7 பாதாம் பருப்புகள் மற்றும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை செய்யும் மாயம், உங்கள் ஆரோக்கியத்தில் எதிரொல்லிகும்.  

குடைமிளகாய் மற்றும் கீரைகள்

குடை மிளகாய் மற்றும் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது என்பதுடன் வைட்டமின் ஈ சத்தும் அதிகம் உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவுபவை. கீரையில் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது, இது உங்களுக்கு சரியான ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More