Home> Health
Advertisement

இரத்த சர்க்கரை முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... கருப்பு உளுந்தை கட்டாயம் சேருங்க..!!

Health Benefits of Karuppu Uzhundhu: வெள்ளை உளுந்துடன் ஒப்பிடுகையில் கருப்பு உளுந்தில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்நிலையில் மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின்கள் என எக்கச்சக்க ஊட்டசத்துகளைக் கொண்ட கருப்பு உளுந்து நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.  

இரத்த சர்க்கரை முதல் எலும்பு ஆரோக்கியம் வரை... கருப்பு உளுந்தை கட்டாயம் சேருங்க..!!

தென்னிந்திய உணவுகளில், துவரம் பருப்புக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தக்கூடிய பருப்பு என்றால் அது உளுந்து. இரும்புச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் உளுந்து எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, எலும்புகளை வலிமையாக்குவது என இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

வெள்ளை உளுந்து விட கருப்பு உளுந்து மிகவும் ஆரோக்கியமானது என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள். வெள்ளை உளுந்துடன் ஒப்பிடுகையில் கருப்பு உளுந்தில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்நிலையில் மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின்கள் என எக்கச்சக்க ஊட்டசத்துகளைக் கொண்ட கருப்பு உளுந்து நன்மைகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.

நீரழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும் கருப்பு உளுந்து

புரதச்சத்து நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், ரத்த சர்க்கரை இருப்பவர்கள் இதனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது பலனளிக்கும். இட்லிக்கான மிளகாய் பொடி தயாரிக்கும் போது, வெள்ளை உளுந்துக்கு பதிலாக கருப்பு உளுந்து பயன்படுத்துவதால், தினமும் வேண்டிய அளவு கருப்பு உளுந்து உடலில் சேர உதவும். இட்லி, தோசை என்பது கிட்டத்தட்ட தினமும் சாப்பிடும் சிற்றுண்டி என்பதால், தொட்டுக்கொள்ள தயாரிக்கப்படும் மிளகாய் பொடி மூலம், கருப்பு உளுந்தை தினமும் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.

எலும்பு ஆரோக்கியம் கொடுக்கும் கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்தோடு, இரும்பு சத்து நிறைந்துள்ளதால், எலும்புகள் வலுவாகும். 40 வயதை தாண்டினாலே, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகிறது. இதனை தவிர்க்க தினமும் கருப்பு உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருப்பு உளுந்து

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலானோருக்கு, நரம்பு தளர்ச்சி மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. இதிலிருந்து விடுபட, கருப்பு உளுந்து அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

குடல் மற்றும் செரிமான ஆரோக்கியம் கொடுக்கும் கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

இதய ஆரோக்கியம் கொடுக்கும் கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் மெக்னீசியம் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதயத்துடிப்பை சீராக்கும் ஆற்றல் கொண்ட பட்டாசியம், இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கும்.

இரத்த சோகையை நீக்கும் கருப்பு உளுந்து

இரும்புச்சத்து அதிகம் கொண்ட கருப்பு உளுந்து, ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியை பெருக்குவதால் ரத்த சோகை நீங்கி, பலவீனமும் நீங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றல் உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தினமும் ஏதோ ஒரு வகையில் சேர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட இனிப்பு உருண்டைகளை வழங்குதல், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More