Home> Health
Advertisement

Diabetes: இன்சுலினை இயற்கையாக சுரக்க செய்யும் ‘நித்திய கல்யாணி ஜூஸ்’! தயாரிக்கும் முறை!

 நித்திய கல்யாணி பூவின் சாற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது

Diabetes: இன்சுலினை இயற்கையாக சுரக்க செய்யும் ‘நித்திய கல்யாணி ஜூஸ்’! தயாரிக்கும் முறை!

ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக, தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய  இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி. நித்திய கல்யாணி அல்லது சதாபஹர் என அழைக்கப்படும் இதில் இன்சுலினை இயற்கையாக சுர க்க வைக்கும் பண்பு இருப்பதால்,  இந்த மலர் நீரிழிவுக்கு அருமுருந்தாக கருதப்படுகிறது. நித்திய கல்யாணி பூவின் சாற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தி தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை நித்தியகல்யாணி தடுக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகபட்ச நிவாரணம் பெறுகிறார்கள். 

சர்க்கரை நோய்க்கு நித்திய கலயாணி சாறு ஏன் மிகவும்நன்மை பயக்கும் என கூறப்படுகிறது என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம். இதில் உள்ள அஜ்மெலிசின், சர்ப்பன்டைன், ஆல்கலாய்டுகள் மற்றும் வின்கிரிஸ்டைன் என்ற சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என  ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | ’கோடை ஆப்பிள்’ நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

நித்திய கல்யாணி இலைகளும் சிறப்பாக கட்டுப்படுத்தும்

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நித்திய கல்யாணி இலைகளின் சாற்றை தினமும் அருந்தி வந்தாலும் சிறப்பன பலன்கள் கிடைக்கும். ஆல்கலாய்டுகளின் பண்புகள் அதன் இலைகளில் காணப்படுகின்றன. இதன் காரணமாக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதன் இலைகளை மென்றும் சாப்பிடலாம்.

கொதித்த  வைத்த பின்பும் பருகலாம்

நித்திய கல்யாணி ஜூஸை தயாரிக்க பூக்கள் மற்றும் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை அருந்தி வரலாம்.  நீங்கள் விரும்பினால், பூக்கள் மற்றும் இலைகளை பொடி செய்து சிறிது சிறிதாக உட்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.

 நித்திய கல்யாணி ஜூஸ்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க நித்திய கல்யாணியை தண்ணிர் கலந்து அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். ஆனால், இது சற்று கசப்பாக இருக்கும் ஆனால் இந்த சாற்றை மற்ற சாறுகளுடன் கலந்து குடிக்கலாம். ஆனால் அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகமாக அருந்துவதால் பக்க விளைவு ஏற்படுவதோடு, சர்க்கரை அளவு வெகுவாக குறையும் அபாயமும் உண்டு.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | இந்த 7 விஷயங்கள் செய்தால் போதும்..அடி வயிறு தொப்பை ஐஸ் போல் கரையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More