Home> Health
Advertisement

டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை மருந்து!

தற்போது தமிழகத்தில் டெங்கு என்னும் கொடிய உயிர்கொல்லி காய்ச்சல் பரவி வருகின்றது

டெங்கு காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை மருந்து!

தற்போது தமிழகத்தில் டெங்கு என்னும் கொடிய உயிர்கொல்லி காய்ச்சல் பரவி வருகின்றறது.  இதனை எலும்பு முறிவுக் காய்ச்சல் என்றும் அழைப்பார்கள். கொசுக்கள் மூலம் பரவும் இக்காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள்என்று எராளமனோர் உயிரை விட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பலர் உயிரை விடுவதற்கு காரணம், அதற்கு எவ்வித தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கபடாததும் மேலும், பலருக்கு டெங்குவின் அறிகுறிகள்  பற்றி சரியாக தெரியாமல் இருப்பதுமாகும். 
தற்போது இந்த டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும்,  நம் சித்த மருத்துவத்தில் இதற்கு ஓர் தீர்வு இருப்பது தெரிய வந்துள்ளது.  டெங்குவின் அறிகுறிகளைக் கண்டறிந்து, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுத்து வந்தால், நிச்சயம் டெங்குவின் கொடிய தாக்கத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.

டெங்கு காய்ச்சல் கூட ஆரம்பத்தில் காய்ச்சலில் தான் ஆரம்பிக்கும். அதன் தீவிரம் அதிகரிக்கும் போது, தான் அதன் பாதிப்பும் அதிகமாக இருக்கும். எனவே, அதன் பாதிப்பு அறிந்து பப்பாளி இலைச்சாற்றினை காலை, மாலை    என இரண்டு  வேளை அருந்துவதன் மூலம், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இரத்தத்தில் உள்ள தட்டையணுக்களின் அளவு குறையாமல் இருக்குமாம். 
 டெங்குவின் அறிகுரியாவன; 
* 2-7 நாட்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் 
* கடுமையான தலை வலி
* கண்களுக்கு பின்புற வலி
* கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
* மிகுதியான சோர்வு
* குமட்டல்
* வாந்தி
* சரும அரிப்பு (காய்ச்சல் வந்த 2-5 நாட்களுக்குள் ஏற்படும்)
* மூக்கு, ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவையாகும்.

Read More