Home> Health
Advertisement

Milk Bath: ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் பால் செய்யும் அற்புதங்கள்..!!

குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் கலந்தால் போதும். சரும நோய்கள், சரும பிரச்சனைகள், சரும பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் அனைத்து மிச்சமாகும்.

Milk Bath:  ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் பால் செய்யும் அற்புதங்கள்..!!

Milk Bath:   குளிப்பது உடலை சுத்தப்படுத்த மட்டுமல்ல, உடல் புத்துணர்ச்சி பெறவும் மிகவும் இன்றியமையாதது. பண்டை காலத்தில் ராஜாக்கள், ராணிகள் பாலால் குளிப்பதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்களும் ராஜா மற்றும் ராணியைப் போலவே, பாலில் குளிக்கலாம். பாலால் குளிப்பதன் மூலம் சரும நோய்கள், சரும பிரச்சனைகள், சரும பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் அனைத்து மிச்சமாகும். 

அதற்காக நீங்கள் லிட்டர் கணக்கில் பாலால் குளிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பக்கெட் குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் சேர்த்தால் போதும். இதனால் பார்லருக்கு செய்யும் செலவுகள், சரும பிரச்சனைகளுக்காக செய்யும் மருத்துவ செலவுகள் அனைத்தும் மிச்சமாகும்.

ALSO READ | Health Tips: உடல் எடை குறைய ஓமம் -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’

பால் கலந்து குளிப்பதன் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

பால் குளியலுக்கு குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் அல்லது பால் பவுடரை கலக்க வேண்டும். இதற்காக, நீங்கள் சாதாரண பால் மட்டுமல்லாது, தேங்காய் பால், ஆடு பால், சோயா பால் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பாலில் இருக்கும் புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்த்திற்கு ஈரப்பதம் அளித்து இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

பால் குளியல், தோல் அரிப்பு, தோலழற்சி போன்ற தோல் நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

குளியல் நீரில் பால் சேர்ப்பது சொரியாசிஸ் அறிகுறிகளைக் குறைக்கும். இந்த அறிகுறிகளில் அரிப்பு, தோல் வெடிப்பு போன்றவை அடங்கும்.

விஷச் செடி காரணமாக, தோல் அரிப்பு, தோல் சிவத்தல் அல்லது வீக்கத்தினால் அவதிப் பட்டால், பால் குளியல் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

பாலில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை புத்துணர்வு பெற உதவும்.

குறிப்பு: இருப்பினும்,  சென்சிடிவிடி அதிகம் உள்ள சருமம் கொண்டவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முதலில் மருத்துவரை கலந்தாலொசித்த பிறகு பால் குளியல் எடுத்துக் கொள்வது பற்றி முடிவெடுக்கவும். குளிக்கும்போது உங்களுக்கு மயக்கம் அல்லது தலைசுற்றல் ஏற்பட்டால்,  இதை செய்ய வேண்டும். மேலும், பால் கலந்த இந்த  குளியல் தண்ணீரை ஒருபோதும் குடிக்க கூடாது.

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Tips: முதுமையை தள்ளிப்போட வேண்டுமா; ‘இந்த’ பழக்கங்கள் கூடாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More