Home> Health
Advertisement

நீரிழிவுக்கு அருமருந்தாகும் ‘இன்சுலின் செடி’ இலை! பயன்படுத்துவது எப்படி!

Diabetes Home Remedies: இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

நீரிழிவுக்கு அருமருந்தாகும் ‘இன்சுலின் செடி’ இலை! பயன்படுத்துவது எப்படி!

சர்க்கரை நோயின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. WHO அறிக்கையின்படி, 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயை முழுவதுமாக குணப்படுத்துவது கடினம் என்றாலும், அதனை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம். மாறிவரும் பழக்கவழக்கங்களாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் இந்நோய் ஏற்படுகிறது. 

இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும், இதை நீரிழிவு நோய் என்று அழைக்கிறோம்.

நீரிழிவு நோய்க்கான சிகிச்சையின் போது, ​​உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தீவிர நீரிழிவு நோய் உள்ள சிலருக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்படுகிறது. இயற்கையான முறையில் இன்சுலின் அளவையும் அதிகரிக்கலாம் அத்தகையை ஒரு செடி தான் இன்சுலின் செடி. இதன் பயன்களையும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

இன்சுலின் செடி

ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல மூலிகைகள் கடுமையான நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. அதில் ஒன்று ஒன்று Costus igneus என்று அழைக்கப்படும் இன்சுலின் செடி. இது உடலில் இன்சுலின் போல் செயல்பட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஒரு தாவரமாகும். இது இன்சுலின் உற்பத்தியை பெருக்குவதால், இது இன்சுலின் செடி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இன்சுலின் செடி என்று அழைக்கப்படும் இதில் இன்சுலின் இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

இன்சுலின் செடி இலையை உட்கொள்ளும் முறை

தினமும் ஒன்று அல்லது இரண்டு இன்சுலில் செடியின் இலைகளை மென்று சாப்பிடுவது சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரையை கிளைகோஜனாக மாற்றும் சில நொதிகள் இதில் உள்ளன. இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். முடிந்தால், அதன் பிரெஷ்ஷான இலைகளை தினமும் உட்கொள்ளுங்கள். இதன் இலைகளை உலர்த்தியும் பொடி செய்யது, தினமும் ஒரு ஸ்பூன் பொடி சாப்பிடுவதும் சர்க்கரை நோய்க்கு பலன் தரும்.

இன்சுலின் செடியின் நன்மைகள்

காஸ்டஸ் இக்னியஸ் என்ப்படும் இன்சுலின் செடி இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளதோடு, சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், பி-கரோட்டின் மற்றும் கார்சோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. நீரிழிவு தவிர, இது நுரையீரல், செரிமானம் மற்றும் கண்களுக்கும் நன்மை பயக்கும்.

இன்சுலின் செடியை வீட்டில் வளர்க்கலாம்

இன்சுலின் செடி ஒரு புதர் செடி, அதை வீட்டில் நட்டு அதன் இலைகளை தினமும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

மா இலைகளும் நன்மை பயக்கும்

இது தவிர மா இலைகளும் நீரிழிச்வு நோயை கட்டுப்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கொய்யா இலைகளும் நீரிழிவுக்கு மாமருந்து

கொய்யா இலைகளில் உள்ள ஆல்பா குளுக்கோசிடேஸைத் தடுக்கிறது. என்வே இது நீரிழுவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது கொய்யா இலைகளை காலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

( பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More