Home> Health
Advertisement

RO வேஸ்ட் வாட்டரை குளிக்க பயன்படுத்தலாமா வேண்டாமா? சுகாதார நிபுணர்களின் அட்வைஸ்

Bathing Alert: ROவில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு குளிக்கலாமா? இது உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது, நிபுணர்களின் கருத்தை அறிந்து கொள்ளுங்கள் 

RO வேஸ்ட் வாட்டரை குளிக்க பயன்படுத்தலாமா வேண்டாமா? சுகாதார நிபுணர்களின் அட்வைஸ்

புதுடெல்லி: நீர் மேலாண்மை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. நீர்வளம் குறைந்து வரும் காலகட்டத்தில், தண்ணீரை குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல், கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். பயன்படுத்திய நீரை எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.

சுத்தமான குடிநீர், 

இன்றைய மாசுபட்ட காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு, நீர் மாசு என மாசுகளின் பிடியில் இருந்து தப்பிக்க நாம் பல வழிகளை கண்டறிகிறோம். அவற்றில், நாம் குடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சுத்தீரிப்பு முறைகளில் RO மிகவும் முக்கியமானது. நீரின் தரம் என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

நீர் சுத்தீகரிப்பு

ஆர்.ஓ என்பது தலைகீழ் சவ்வூடுபரவல் (Reverse osmosis ( RO) ) எனபப்டும் நீர் சுத்திகரிப்பு செயல்முறையாகும். இந்த முறையில் அயனிகள், தேவையற்ற மூலக்கூறுகள் மற்றும் ஒரு பகுதி ஊடுருவக்கூடிய சவ்வைப் பயன்படுத்தி குடிநீரில் இருந்து பெரிய துகள்களை நீக்கப்படுகிறது. இப்படி சுத்தீகரிக்கப்படும் நீரில் சுத்தமான நீரை பயன்படுத்தும் நாம், அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரை வீணாக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், அந்த நீரில் குளிக்கலாமா? என்ற கேள்வி உங்கள் மனதில் அடிக்கடி எழலாம், ஆனால் இது குறித்த சரியான தகவல் இல்லாததால், அதை குளிப்பதற்கு பயன்படுத்தத் தயங்கலாம். இந்த கேள்விக்கான சரியான பதிலை தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஆர்ஓவில் இருந்து எவ்வளவு தண்ணீர் வீணாகிறது?

சுத்தமான தண்ணீரை குடிப்பதற்கு, அனைத்து வீடுகளிலும், ஆர்.ஓ., அமைப்பு பொருத்துவது வழக்கம். அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் குளிக்கலாமா, கூடாதா என்ற கேள்விக்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? நீர் சுத்திகரிப்பு இயந்திரத்திலிருந்து ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரைப் பெற வேண்டுமானால், அதற்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது, ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரைப் பெற 2 லிட்டர் வீணாக்கப்படுகிறது. 

இந்த கழிவு நீரில் கரைந்துள்ள கரைந்த திடப்பொருட்களின் ( Total Dissolved Solids, TDS) அளவு மிக அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே எந்த சூழ்நிலையிலும் ஆர்.ஓவில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குடிக்க முடியாது.

மேலும் படிக்க | உடல் எடை சட்டுனு குறைய... தூங்க செல்லும் முன் இந்த 8 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

RO கழிவு நீரில் குளிக்கலாமா?

ஆர்.ஓவில் இருந்து வெளியேறும் நீரில் குளிப்பதைப் பற்றி பேசினால் (Can bath with RO waste water) அதுவும் முடியாது. இதற்குக் காரணம் ஆர்ஓ கழிவு நீரில் கரிமப் பொருட்களும் கனிம உப்புகளும் வெவ்வேறு அளவுகளில் காணப்படுவதே ஆகும். இதனால் அந்த நீர் மிகவும் மாசுபட்டுள்ளது. இதனுடன், இதில் உள்ள டிடிஎஸ் அளவும் மிக அதிகம்.

மிகவும் அதிகமான டிடிஎஸ் கொண்ட கழிவு நீரில் குளித்தால், சருமம் மிக மோசமாக பாதிக்கப்படும். ரிங்வோர்ம், அரிப்பு உள்ளிட்ட பல சரும நோய்களுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமல்ல, உங்கள் தலைமுடியும் பாதிக்கப்படும்.  எனவே, ஆர்.ஓவில் இருந்து வீணாகும் தண்ணீரை ஒருபோதும் குளிக்க பயன்படுத்த வேண்டாம்.

வீணாகும் ஆர்ஓ தண்ணீரை எப்படி பயன்படுத்தலாம்?
ஆர்.ஓவில் இருந்து வெளியேறும் மாசுபட்ட தண்ணீரை வீணாக்க விரும்பவில்லை மற்றும் RO கழிவு நீரை பயன்படுத்த விரும்பினால், அதற்கு பல வழிகள் உள்ளன. நீங்கள் அந்த தண்ணீரை சேகரித்து உங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

ஆர்.ஓ அழுக்கு நீரை, வீட்டை துடைக்கவும், கழிப்பறையை சுத்தம் செய்யவோ பயன்படுத்தலாம். இதனுடன், அந்த தண்ணீரை உங்கள் கார், பைக் அல்லது பிற வாகனங்களை கழுவவும் பயன்படுத்தலாம். ,

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வேகமா உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும்.. சூப்பரா குறைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More