Home> Health
Advertisement

இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்! அபாய எச்சரிக்கை

Foods to Avoid in Diabetes: சர்க்கரை நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் நிலையில் பலருக்கு இன்சுலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இன்சுலின் பயன்படுத்தும் நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்! அபாய எச்சரிக்கை

சர்க்கரை நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் நிலையில் பலருக்கு இன்சுலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கான உணவுமுறைகள் பலருக்கும் தெரியும் என்றாலும், இன்சுலில் பயபடுத்துபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது பலருக்கு தெரியவில்லை: உயர் இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு நோயில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் அதில், டைப்-1 நீரிழிவு நோயில் நமது கணையத்தால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது. இரண்டாம் வகை நீரிழிவு நோயில், உடலுக்கு போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடிவதில்லை. எனவே, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
 
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதுடன் சில உணவுகளை தவிர்க்க வேண்டும், இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தும். அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இருப்பினும், இந்த உணவுகளை நீங்கள் குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!

ஏனெனில் அவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய அத்தகைய உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சுவையூட்டப்பட்ட தயிர்
சுவையூட்டப்பட்ட தயிரில் செயற்கை சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது, இது  இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்க உதவுகிறது. எனவே யோகர்ட்களைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக சாதாரண தயிர் மோரை பயன்படுத்துவது நல்லது.  
 
ஸ்மூத்திகள்
ரெடிமேட் ஸ்மூத்திகளை வாங்கினால், நார்ச்சத்து இல்லாத பழச்சாறுகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். தியிருக்கலாம். உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், இரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும், எனவே உங்கள் உணவில் நார்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

fallbacks

சர்க்கரை சத்து கொண்ட தானியங்கள்
சில தானியங்களில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, சிலவற்றில் அவை இல்லை. ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிக அளவில் அதிகரிக்கச் செய்யும்.

எனவே, தானியங்களை சாப்பிடும் போது, அவை ​​புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராது.
 
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் மைதா ரொட்டி போன்ற உணவுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கின்றன, எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More