Home> Health
Advertisement

Hydroxychloroquine, HIV மருந்துகள் COVID-19 பரிசோதனைகளில் பயன்படுத்தப்படாது: WHO

Hydroxychloroquine,  HIV மருந்துகளால் இறப்பு விகிதம் குறையவில்லை என WHO கூறியுள்ளது.

Hydroxychloroquine, HIV மருந்துகள் COVID-19  பரிசோதனைகளில் பயன்படுத்தப்படாது: WHO

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) , எச்.ஐ.வி (HIV) மருந்துகளை பயன்படுத்துவதால், இறப்பு விகிதம் குறையவில்லை என்பதால், COVID-19 சோதனைகளில் இந்த மருந்துகளை பயன்படுத்துவதை , உலக சுகாதார மையம் WHO நிறுத்துகிறது.

முதல் முறையாக, உலகளவில் 2,00,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் ஒரே நாளில் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த பின்னடைவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட மொத்த 2,12,326 தொற்று பாதிப்புகளில், அமெரிக்காவில் மிக அதிக அளவாக, 53,213 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக, WHO தெரிவித்துள்ளது.

ஜெனீவா (Geneva): இந்த மருந்துகள் இறப்பு விகிதத்தைக் குறைக்கத் தவறியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மற்றும் எச்.ஐ.வி (HIV) மருந்து லோபினாவிர் / ரிடோனாவிர் (lopinavir/ritonavir ) கொடுத்து பரிசோதனை செய்வதை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

ALSO READ |டெல்லியில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே குணமடைக்கின்றனர்: கெஜ்ரிவால்!

உலகளவில் 200,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகளை ஒரே நாளில் முதன்முறையாக WHO தெரிவித்துள்ளதால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட மொத்த 212,326 கொரோனா (Corona) தொற்று பாதிப்புகளில்  53,213 பேர் அமெரிக்காவை சேந்தவர்கள் என WHO தெரிவித்துள்ளது.

இந்த மருந்தின் மீது நடத்தப்பட்ட இடைக்கால சோதனை முடிவுகள், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர் / ரிடோனாவிர் ஆகியவை கொடுப்பதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காட்டுகின்றன. அதனால் இந்த பரிசோதனை உடனடியாக நிறுத்தப்படுவதாக WHO தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளை நிறுத்துவது தொடர்பான முடிவு, இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் சர்வதேச குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்படாத கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்படும் பரிசோதனை அல்லது நோய்த்தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான  பிற ஆய்வுகளை பாதிக்காது இந்த முடிவு பாதிக்காது என்றும் ஐ.நா (UN) தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ | ரஷ்யாவை சீண்டும் சீனா, நட்பின் கண்ணை மறைத்த சுயநலம்!!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமையில் பரிசோதனை நடத்தும் மற்றொரு பிரிவு, கோவிட் -19  நோயாளிகள் மீது, கிலியட்டின் வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டிஸிவிர் (Gilead antiviral drug remdesivir) மருந்துகளுக்கான பரிசோதனைகளை நடத்தி வருகிறது.  இந்த மருந்தை பயன்படுத்துவதால், விரைவில் நோயாளிகள் குணமடைகின்றனர் என்பதால்,  இதை பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழ்ங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், 39 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட 5,500 நோயாளிகள் மீது கொரோனா மருந்து பரிசோதனைகள்  நடத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான முடிவுகள், இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகின்றன.

COVID-19 தொற்று நோய்க்கான 18 தடுப்பு மருந்துகள்  மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படுகின்றன.

WHO இன், அவசர பிரிவின் உயர் அதிகாரியான மைக் ரியான், வெள்ளிக்கிழமை  அன்று பேசும் போது, தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்று கணிப்பது விவேகமற்றது என்று கூறினார். தடுப்பு மருந்து இந்த ஆண்டிற்குள் தயாரிக்கப்பட்டு விடும் என்றாலும், அது எந்த அளவில் மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்ற கேள்வியும் உள்ளதாக கூறினார். 

Read More