Home> Health
Advertisement

பாடாய் படுத்தும் கொலஸ்ட்ராலை பட்டென்று கரைக்கும் தேன்! ஆனா கூட்டு சேர ஒரு பொருள் வேணும்!

How To Use Honey For Cholesterol Burn: தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் எதை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து வெளியேறும்? தெரிந்துக் கொள்வோம்...

பாடாய் படுத்தும் கொலஸ்ட்ராலை பட்டென்று கரைக்கும் தேன்! ஆனா கூட்டு சேர ஒரு பொருள் வேணும்!

Empty Stomach Remedy: உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க சில சுலபமான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அதை மறந்து போயிருக்கலாம் என்றால், நகரத்தில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற எளிய மருத்துவ மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் தெரிவதில்லை. தவறான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல கடுமையான நோய்கள் நம்மை பாதிக்கின்றன.

கொலஸ்ட்ரால் பிரச்சனையும் இன்று பலரையும் பாடாய் படுத்தி வருகிறது. கொலஸ்ட்ரால் என்பது உடலில் இருக்கும் மெழுகு போன்ற பொருள், இது உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு அவசியமானது. இதில், நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொழுப்பு (LDL) என இரண்டு வகைகள் உள்ளன. உடல் ஆரோக்கியமாக இருக்க நல்ல கொலஸ்ட்ரால் அவசியம்.

இரண்டு கொலஸ்ட்ராலுமே நம் உடலால் உருவாக்கப்படுபவை என்றால், அவை உடல் இயக்கத்தில் நரம்புகளில் படியத் தொடங்குகின்றன. அதில் கெட்ட கொலஸ்ட்ரால் நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். அதிகமாக கொலஸ்ட்ரால் சேர்ந்தால், அது உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும்.

மாரடைப்பு, பக்கவாதம் என வாழ்க்கையையே முடக்கிப் போடும் கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. கொலஸ்ட்ராலைக் குறைக்க மருந்துகள் உள்ளன. அது நோய் வந்த பிறகு தான். ஆனால் கொலஸ்ட்ராலை உடலில் படிய விடாமல் தடுக்கும் உணவுகளை பயன்படுத்தி ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?

உடலில் அதிகரிக்கும் கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ள பொருட்களில் ஒன்று தேன். தேன், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைப் பெருமளவு குறைக்கும். இனிப்பாக இருக்கும் பொருள், எப்படி கொலஸ்ட்ராலைக் குறைக்கும் என்று தோன்றுகிறதா? விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

தேன் என்பது, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இனிப்புச் சுரங்கம். ஆனால், தேனை வேறு பொருளுடன் சேர்த்து உண்ணும்போது, இந்த இரண்டும் சேர்ந்து உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.

நெல்லிக்காய் + தேன் = ஆரோக்கியம்
நெல்லிக்காய், தேன் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு அருமருந்தாய் செயல்படும் அற்புதமான பொருட்கள். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையில் மிகவும் நன்மை பயக்க, இந்த இரண்டும் கூட்டு சேர வேண்டும். நெல்லிக்காய் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.

நெல்லிக்காயின் ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, ஆல்கலாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. நெல்லிக்காயை தொடர்ந்து பயன்படுத்திவந்தால், தமனி சுவர்களை ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க | சூட்டை அதிகரிக்கும் பழமா இருந்தாலும் ஆரோக்கியத்தையும் அதிரடியா உயர்த்தும் அன்னாசி!

ஆரோக்கியத்திற்கு தேன்

ஊட்டச்சத்துக்கள் மிக்க தேனில் உள்ள மூலக்கூறுகள் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. நெல்லிக்காய் மற்றும் தேனை தொடர்ந்து உட்கொள்வது அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்.

நெல்லிக்காய்-தேன் எப்படி உட்கொள்ள வேண்டும்?
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபட, நெல்லிக்காய் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அத்துடன் சம அளவு தேனை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். இதைத்தவிர, பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

நெல்லிக்காய் மற்றும் தேன் உட்கொள்வது உடலில் அதிகரித்த கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும் என்றாலும், ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்தவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் பிழிந்து எடுக்கும் இந்த பானங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More