Home> Health
Advertisement

Liver vs Giloy: அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்

சீந்தில் என்னும் அமிர்தவல்லியை எப்படி பயன்படுத்துவது தெரியுமா? ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் இதோ...

Liver vs Giloy: அமிர்தவல்லி கல்லீரலை சேதப்படுத்துமா? ஆயுஷ் அமைச்சகத்தின் விளக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகில் கோவிட் நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.

மூலிகைகள், வீட்டு வைத்தியம், உணவே மருந்து என மக்கள் ஆரோக்கியத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். அதில், அமிர்தவல்லி, சோமவல்லி, அமிர்தை, குண்டலி, அமிர்தக்கொடி, சீந்தில் என பல பெயர்களால் அழைக்கப்படும் மூலிகையை அதிகளவு உட்கொண்டுள்ளனர். 

ஆனால் கல்லீரல் மோசமாக இருக்கும்போது, ​​சீந்திலை வ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த வழிகாட்டுதலை ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ளது.

அமிர்தவல்லி கொடி, ஆயுர்வேதத்தின் முக்கியமான மருந்து என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது, தூள் அல்லது மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளும் சீந்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  

மேலும் படிக்க | சைக்கிள் ஓட்டினா, கொழுப்பும், நோய்களும் உங்க கிட்டகூட வராது

ஆனால், அமிர்தவல்லியை பயன்படுத்தியதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாக பல செய்திகள் வந்தன, இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஆயுஷ் அமைச்சகம், அமிர்தவல்லி மூலிகையால், கல்லீரலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் தொடர்பான மக்களின் சந்தேகத்தை நீக்க முயற்சிகளை எடுத்துள்ளது.

அமிர்தவல்லி  
இந்தியாவை தாயகமாகக் கொண்ட மூலிகை சீந்தில். இது அற்புதமான ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது. மூளை, சுவாச அமைப்பு, இதயம், தோல் மற்றும் பிற உறுப்புகள் என நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீர் செய்யக்கூடிய மூலிகைகளில் சீந்திலும் ஒன்று என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அமிர்தவல்லி, உடலில் இருக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுவதன் மூலம் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. 

செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்ட அமிர்தக்கொடி, சுவாச பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது சீந்தில்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலைக் குறைக்க இதுவே உறுதியான வழி, இதை சாப்பிடுங்கள்

அமிர்தவல்லியின் பயன்பாடு கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்குமா?

சக்திவாய்ந்த ஆயுர்வேத மருந்தாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். வேறு எந்த உணவோ அல்லது மூலிகையைப் போலவே, அமிர்தவல்லியை அதிகமாக பயன்படுத்தினால் அது எதிர்மறை விளைவையே கொடுக்கும்.

கல்லீரலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, அமிர்தவல்லியின் அதிகமான நுகர்வு, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும்.

சீந்திலை பயன்படுத்துவதை ஆயுர்வேதம் பாதுகாப்பானது என்று சொன்னாலும், அமிர்தவல்லியின் சாற்றை அப்படியே பானமாக குடிக்கவேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை. 

மேலும் படிக்க | தொற்றை எதிர்த்து போராட ஆயுர்வேதம் அளிக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்

அமிர்தவல்லியை சாறாக குடிக்கும்போது, அதை தண்ணீரில் கலந்து குடிக்கவும், ஆறு வாரங்களுக்கு மேல் அமிர்தவல்லியை தொடர்ந்து உட்கொள்ளக்கூடாது.

சீந்திலை பொடியாக செய்து வைத்துக் கொண்டு, அதை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது சிறந்த பலனைக் கொடுக்கும். ஒரு கப் சீந்தில் தூளுடன் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அது நன்கு கொதித்து பாதியாக சுண்டியதும் பருகவும். 

அதேபோல, அமிர்தவல்லியை தூளாக்கி, அதை தேனுடன் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பெரும் பயன்கள்

சீந்தில் மாத்திரைகள் 

மாத்திரை வடிவத்திலும் அமிர்தவல்லியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 2 மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். ஆயுஷ் அமைச்சகம் 500 மி.கி அமிர்தவல்லியை சாறாக குடிக்கலாம் என்று கூறுகிறது.

1-3 கிராம் வரையிலான அமிர்தவல்லிப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை என 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

ஆயுர்வேத மூலிகைகளாக இருந்தாலும், ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க | சிறுநீரக நோய் கண்களை பாதிக்கலாம், தடுப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More