Home> Health
Advertisement

பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..

பலரும், தங்கள் தொப்பையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருப்பர். அவர்களுக்காகவே சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்..

உடல் பருமனுடன் இருப்பவர்கள் மட்டுமன்றி, எடை அதிகமாக இல்லாதவர்களுக்கு கூட, வயிற்று தொப்பை இருப்பது சகஜமான விஷயமாகும். அதிகளவு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களுக்கு மட்டுமன்றி, குறைவாக சாப்பிடுபவர்களுக்கு கூட தொப்பை வரலாம். தளர்வான ஆடைகள் உடுத்தும் போது இது பெரிய பிரச்சனையாக தெரியவில்லை என்றாலும், நமக்கு பிடித்த ஆடைகள் கொஞ்சம் ஃபிட்டாக இருந்தாலும் தொப்பை வெளியே தெரிந்து அதை போட முடியாத நிலைக்கு தள்ளிவிடும். இந்த வயிற்று தொப்பையை குறைக்க பித்யேக டயட்டுடன் சேர்த்து, சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உடற்பயிற்சிகளுள், சில யோகசனங்களும் அடங்கும். அவை என்னென்ன தெரியுமா? 

தொப்பையை குறைக்க யோகாசனங்கள்:

உடல் பருமனுடன் இருப்பது பின்னாளில் பல்வேறு வகையான உடல் நலக்கோளாறுகளுக்கு வழி வகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இளமை காலத்தில் இது குறித்து பெரிதாக அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும்,  வயதான பிறகு இதற்கான பின்விளைவுகள் வரலாம் என எச்சரிக்கின்றனர். இதை சமாளிக்க டயட் மட்டுமன்றி, யோகாசனங்களும் உதவுமாம். 

உஸ்த்ராசனம்:

வயிறு, இடுப்பு, கை மற்றும் கால்களை உபயோகித்து செய்ய வேண்டிய யோகாசனங்களுள் ஒன்று உஸ்த்ராசனம். இதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? 

வழிமுறைகள்:

>நீங்கள் மண்டியிட்டு அமரும் போது, உங்களது கைகள் இடுப்பில் இருக்க வேண்டும். மண்டியிட்ட பின்பு, உங்கள் கை பாதங்களால் கால் பாதங்களை தொடவ் வேண்டும். அப்படி தொடும் போது நீங்கள்  மேல் நோக்கி பார்க்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் அப்படியே இருந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இந்த நிலையில் இருந்து பொறுமையாக எழுந்து பின்னர் நிற்க வேண்டும்.

ஹலாசனம்:

இந்த ஆசனம், ஒருவர் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்கள் மன நிலையை மேம்படுத்தவும் இந்த ஆசனம் உதவுகிறது. 

எப்படி செய்வது?

>நீங்கள் தரையில் நேராக படுக்கும் போது உங்கள் கைகள் இரு பக்கங்களிலும் தரையில் இருக்க வேண்டும், 
>உங்கள் உள் தசைகளை உபயோகித்து, உங்கள் கால்களை 90 டிகிரிக்கு தூக்க வேண்டும். 
>உங்கள் கைகளை முதுகில் வைத்து மெதுவாக உங்கள் கால்களை இடுப்பால் தூக்க வேண்டும். 
>இதே நிலையில் சில நிமிடங்கள் இருந்து, பின்பு மூச்சை சில முறை இழுத்து விட வேண்டும். 

fallbacks

பாதஹஸ்தாசனம்:

வயிற்று தசைகளை பலப்படுத்தும் யோகாசனங்களுள், இதுவும் ஒன்று. இது, உடலில் உள்ள முக்கிய தசைகள் வலுபெற உதவுவதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நான்-ஸ்டிக் பாத்திரங்களை யூஸ் பண்ணாதீங்க... எச்சரிக்கும் ICMR..!!

எப்படி செய்வது?

>முதலில் உங்கள் கை பாதங்களை இரு பக்கமும் தரையில் வைத்து உங்கள் கால் முட்டியை மடக்காமல் குணிய வேண்டும். 
>உங்கள் நாசி, உங்களது முட்டியில் படும் வகையில் குணிய வேண்டும். 
>இந்த நிலையில் சில வினாடிகளுக்கு மூச்சை இழுத்து விட வேண்டும். 

சந்தோலாசனம்:

ஆங்கிலத்தில் இந்த யோகாசனத்தை ப்ளாங்க் என்று கூறுவர். இதை தோள்பட்டை மற்றும் கால்களை வத்து செய்ய வேண்டும். 

எப்படி செய்வது?

>உங்கள் தோள்பட்டை நேராக, உங்கள் கைகளை தரையில் வைக்கவும். 
>உங்கள் பாதங்கள் மற்றும் கால் நுணியில் உடலின் ஒட்டுமொத்த எடையையும் பாலன்ஸ் செய்ய வேண்டும். 
>இந்த நிலையில் மூச்சை இழுத்து விட வேண்டும். 
>இப்படி 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இரத்தக் கொதிப்பு நோயா? BP அதிகமாகாமா இருக்க இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More