Home> Health
Advertisement

கோடையில் பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்? ஜூஸாக குடிக்கலாமா?

கோடை காலங்களில் பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது.  

கோடையில் பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்? ஜூஸாக குடிக்கலாமா?

கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறைவது என்பது இயல்பானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளலாம். இதனால் சரும வறட்சி, உடல் வலி, கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். கோடையில் வழக்கத்தை விட அதிகமாக நீர்சத்து குறைபாடு இருக்கும் என்பதால், தண்ணீரை மட்டும் குடிக்காமல் நீர்ச்சத்து மிக்க பழங்களை சாப்பிடுவது சிறந்தது.

தர்பூசணி

தர்பூசணியில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை தவிர பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை அதிகம் உள்ளன. தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய நீர் பற்றாக்குறை உடனே ஈடு செய்யப்படும்.

மேலும் படிக்க | Spine Health: முதுகெலும்பை வலுவாக்கும் ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்!

கிர்ணிப் பழம்

முலாம் பழம் அல்லது கிர்ணிப் பழம் என கூறப்படும் இப்பழத்தில் நீர்ச்சத்து மிகுந்து உள்ளது. வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவு காணப்படுகின்றன. வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிட வேண்டும்.

சோர்வை நீக்கும் பழங்கள்

சாத்துக்குடி, திராட்சை, ஆரஞ்சு மற்றும் நெல்லிக்காய் போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவது சிறந்தது. இவற்றை பழச்சாறாகவும் குடிக்கலாம். இந்தப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் வெயிலால் ஏற்படும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!

அன்னாசிப் பழம்:

நா வறட்சியை குறைக்கக்கூடிய ஆற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உள்ளது. நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது அன்னாசிப்பழம். மேலும் சப்போட்டா, மாம்பழம்,  கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களைத் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். இந்தப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகளின் அளவு அதிகரிக்கும். செயற்கை இனிப்பான்களான சர்க்கரை உள்ளிட்டவைகளை சேர்க்காமல் பழங்களை ஜூஸாக்கி சாப்பிடலாம். ஜூஸ் என்பதை விட பழமாக சாப்பிடுவது சிறந்தது. இதன்மூலம் உடலுக்கு தேவையான நார்சத்து கிடைத்து செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More