Home> Health
Advertisement

டெங்கு காய்ச்சல்... இரத்தத்தில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் ‘சில’ பழங்கள்

Fruits To Improve Platelets: மழைக் காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நாம் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு காய்ச்சல்.  

டெங்கு காய்ச்சல்... இரத்தத்தில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவும் ‘சில’ பழங்கள்

Fruits To Improve Platelets: மழைக் காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நாம் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு காய்ச்சல்.  டெங்கு ஒரு வைரஸ் தொற்று. இது ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலம் பரவுகிறது. அளவிற்கு அதிக காய்ச்சல், மூட்டு மற்றும் தசை வலி, கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி,  உடலில் அரிப்பு மற்றும் லேசான இரத்தப்போக்கு ஆகியவை டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும்.  

டெங்கு காய்ச்சல் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. டெங்கு காய்ச்சலில், உடலில் பிளேட்லெட்டுகள் குறையத் தொடங்கி, பலவீனம் ஏற்படுகிறது. தொடர்ந்து காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி இருப்பதன் காரணமாக உடலின் நிலை மோசமடையத் தொடங்குகிறது. பிளேட்லெட்டுகள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைந்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படும்.

டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய, உணவில் வைட்டமின் சி நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பிளேட்லெட்டுகள் அதிகரிக்க உதவும். அதோடு, உடலில் நீர்சத்து குறையாமல் இருக்கு முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய உதவுவதோடு, பிளேட்லெட்டுகளும் அதிகரிக்க உதவும் பழங்களை அறிந்து கொள்ளலாம்.

டெங்குவில் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க எந்த பழங்களை சாப்பிட வேண்டும் (Pruits To Improve Platelets)

மாதுளம் பழம்

டெங்கு நோயாளிகள் இரும்பு சத்து நிறைந்த, இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்ற மாதுளையை சாப்பிடுவது பலன் அளிக்கும். மாதுளை சாப்பிடுவதால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். மாதுளை உடலில் இரத்தம் மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிப்பதால், சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும். மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல உடல் பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்கும். மாதுளை வைட்டமின் சியின் மூலமாகவும் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 

பப்பாளி

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நார்ச்சத்து நிறைந்த பப்பாளி டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பப்பாளி இலைச்சாறு டெங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலை சாறு பிளேட்லெட்டுகள் அதிகரிக்க பெரிதும் உதவும். டெங்கு நோயாளிகள் விரைவாக குணமடைய பப்பாளி பழத்தை சாப்பிடலாம்.

மேலும் படிக்க | சுறுசுறுப்பான மூளை, துடிப்பான இதயம், சிக்கென்ற உடல்... தினம் 4-5 பிஸ்தா பருப்பு போதும்

ஆரஞ்சு: 

 வைட்டமின் சி நிறைந்த பழங்களில் ஆரஞ்சு  சாப்பிடுவது டெங்கு நோயாளிகள் குணமாக உதவும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரஞ்சசில் உள்ள  நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, டெங்கு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளை அதிகரிக்கவும் உதவுகின்றன.

கொய்யா:

ஆரஞ்சு பழத்தை போல் கொய்யா பழத்திலும்,  வைட்டமின் சி மற்றும் நார்சத்து நிறைந்துள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்திஅதிகரிப்பதோடு, டெங்கு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளும் அதிகரிக்கும்.

ஆப்பிள் - டெங்கு அல்லது வேறு எந்த காய்ச்சலாக இருந்தாலும், ஆப்பிள் மிகவும் நன்மை பயக்கும். ஆப்பிளில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்ச்சலில் இருந்து விரைவாக மீள் உதவும். ஆப்பிள் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கிவி

கிவி பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது. கிவி பழத்தில், வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.  டெங்கு நோயாளிகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இது உதவுகிறது. இது தவிர, டெங்கு நோயாளர்களுக்கு குணமாக உதவும் பல சத்துக்கள் காணப்படுகின்றன. கிவியில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் எளிதாகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எலும்பு மெலிதல்... கண் பார்வை பாதிப்பு... சுனிதா வில்லியம்ஸின் தீவிர உடல் நல பிரச்சனைகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More