Home> Health
Advertisement

கொரோனா: 100 வயதான மூதாட்டியின் உற்சாகம் கொடுக்கும் உத்வேகமும் நம்பிக்கையும்

கடந்த ஆண்டு தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டி, கொரொனாவையும் தோற்கடித்துள்ளார்கடந்த ஆண்டு தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டி, கொரொனாவையும் தோற்கடித்துள்ளார்

கொரோனா: 100 வயதான மூதாட்டியின் உற்சாகம் கொடுக்கும் உத்வேகமும் நம்பிக்கையும்

புதுடெல்லி: பேரார்வம் இருந்தால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த 100 வயதான மூதாட்டி என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த பெண் தனது 100 வது பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொடிய கொரோனா வைரஸை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.  

கடந்த ஆண்டு தான் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த 100 வயது மூதாட்டிக்கு நிமோனியா ஏற்பட்டது. ஆனால் தனது மன உறுதியால் நிமோனியாவிலிருந்து மீண்டு அனைவருக்கும் நம்பிக்கையளிக்கிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர் லியோரா மார்ட்டின் என்ற மூதாட்டி. சமீபத்தில் அவர் வசிக்கும் இடத்தில் 76 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.  அப்போது லியோராவுக்கும் ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா பதிப்பு   இருப்பது கண்டறியப்பட்டது.  பிறகு ஜூன் 13 அன்று இரண்டாவது முறை நடைபெற்ற கொரோனா பரிசோதனையில், அவரிடம் இருந்து கொரோனா அகன்றுவிட்டது   கண்டறியப்பட்டது.

Read Also | பிரியங்கா காந்தி ஒரு மாதத்திற்குள் வீட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவு

கடந்த ஆண்டு தான் ஒரு கொடிய நோயிலிருந்து மீண்டு வந்தேன் என்று புற்றுநோயையும், நிமோனியாவையும் தோற்கடித்த வெற்றிப் பெண்மணி

லியோரா மார்ட்டின் கூறுகிறார். இதைத் தவிர அவருக்கு நிமோனியாவும் இருந்தது. நிமோனியா சிகிச்சையின் போது தான் பிழைப்பது சிரமம் என்று உணர்ந்ததாக லியோரா கூறுகிறார். ஆனால் தனது போராட்ட குணத்தினாலும், வாழும் விருப்பத்தின் காரணமாக, நிமோனியாவிலிருந்து மீண்டெழுந்துள்ளார் இந்த வீரப் பெண்மணி. 

Read Also | மைனர் சகோதரியின் கற்பழிப்புக்கு திஹார் சிறையில் பழிவாங்கிய கைதி

ஞாயிற்றுக்கிழமையன்று, கொரோனா வைரஸ் தொடர்பான இரண்டு சாதனைப் பதிவுகள் நிறுவப்பட்டன என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைத் தாண்டியது.  அதுமட்டுமல்ல, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்த தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் வயதானவர்கள் கூட மன உறுதியால் நோயை எதிர்த்து வெற்றி பெறும் தகவல்கள், மற்றவர்களுக்கு ஊக்கமூட்டி நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

Read More