Home> Health
Advertisement

கோடை: எப்படி நாள் முழுவதும் சுறு சுறுப்பாக தங்களை வைத்துக் கொள்வது!

கோடை: எப்படி நாள் முழுவதும் சுறு சுறுப்பாக தங்களை வைத்துக் கொள்வது!

கோடை வெயிலில் வெளியே செல்லும் போது வியர்வை அதிகமா வெளியேறி நமது உடல் சோர்வடைந்து மந்தமான நிலை ஏற்படுகிறது. மேலும் நமது தோல் உலர்ந்து போய்விடும், இந்த கோடை வெயிலினால் ஒரு விதமான வெறுப்பு தன்மை நமக்குள் ஏற்படுகிறது.

நமக்குள் சுறுசுறுப்பு தன்மை அதிகரிக்க மற்றும் நமது தசைகளுக்கு நன்றாக செயல்படவும், நமது உடலுக்கு தேவையான ஆற்றல் வழங்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். அவை எளிதில் ஜீரணமாகி நமது உடம்பில் இருந்து சோம்பேறி தன்மை நீக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். எனவே கோடை காலத்திகேற்ப ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். 

நீங்கள் குறிப்பிட்ட உணவை உண்டால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வேறு சில உணவை சாப்பிட்டால், மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும் இருப்பதோடு, உங்கள் தூக்கத்தையும் அதிகரிக்கும். தவறான வகை உணவை உட்கொண்டால், உடல் கனத்து இருக்கும், சரியான வகை உணவை உட்கொண்டால், உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். 

இதைப்பற்றி சுகாதார நிபுணர் டோலி குமார் கூறுவது:-

1. ஒரு ஆரோக்கியமான விரைவான தீர்வு காண காலையில் ஆடை நீக்கிய பால் மற்றும் புதிய பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. நார்ச்சத்து, புரதம், இரும்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்டின் அடங்கிய உணவுகள் சாப்பிட்டால் மிகவும் ஆரோக்கியமாக உடலை நாள்தோறும் வைத்திருக்கலாம்.
3. கோடையில் உடலை குளிர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள பழச்சாறு மற்றும் பானங்கள் அருந்த வேண்டும்.
4. பச்சை தேயிலை டீ ஒரு அற்புதமான பானம் ஆகும். இதை காலையில் அல்லது மாலை குடிக்கலாம்.
5. பச்சை தேயிலை டீயில் ஆன்டி ஆக்சிடென்டின் அதிக அளவில் இருப்பதால் இவை நோய் எதிர்ப்பை நமது உடலில் பலப்படுத்தும் மற்றும் நமது நினைவாற்றல் மேம்படுத்த உதவும்.
6. பச்சை தேயிலை டீயின் வாசனை மற்றும் அதன் இனிமையான சுவை நமது உடலின் கோடை தாக்கத்தை கட்டப்படுகிறது.
7. தேன் மற்றும் ஒரு துண்டு எலுமிச்சை இன்னும் சில சுவைகளை சேர்த்து தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது. 

Read More