Home> Health
Advertisement

தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக வெங்காயம் உடல் எடையை குறைப்பது, உடலுக்கு குளிர்ச்சி தருவது, சிறுநீரக பிரச்சனையை சரிசெய்வது போன்ற பல பிரச்சனைகளை சரி செய்கிறது.    

தினமும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

இந்திய உணவு வகைகளில் வெங்காயம் முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது, வெங்காயத்தை மையப்படுத்தியே உணவு பொருள் தயாரிக்கப்படுகிறது.  மசாலாப் பொருட்களில் சிறந்து விளங்கும் வெங்காயம் உணவுக்கு சுவையை கொடுக்கிறது, இதன் சுவையை தெளிவாக நம்மால் கூறிவிட முடியாது.  வெங்காயத்தில் அதிகளவு நீர் நிரம்பியுள்ளது, மேலும் குறைந்த அளவே இதில் கொழுப்பு உள்ளது.  வெங்காயத்தை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம், இதனை எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு பலன் கிடைக்கிறது.  பொதுவாக வெங்காயம் உடல் எடையை குறைப்பது, உடலுக்கு குளிர்ச்சி தருவது, சிறுநீரக பிரச்சனையை சரிசெய்வது போன்ற பல பிரச்சனைகளை சரி செய்கிறது.  

மேலும் படிக்க | லிமிட்டுக்கு அதிகமா உப்பு சாப்பிட்டா இவ்வளவு ஆபத்து இருக்கா?

வெங்காயத்தில் இன்சுலின் உற்பத்தியை துரிதப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருள் உள்ளது, இதனை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால்  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறது. இதனால் வெங்காயம் நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது.  மேலும் வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது, பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது ரத்தம் உறைதல் பிரச்சனைகளை சரிசெய்து ரத்த ஓட்டத்தை சீராக்க வழிவகுக்கிறது.

fallbacks

இதுதவிர வெங்காயம் இன்னும் சில நன்மைகளை கொண்டிருக்கிறது, வெங்காயம் சாப்பிடுவதால் சளி பிரச்சனை மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் குணமடையும்.  உணவின் சுவையை கூட்ட பயன்படுத்தப்படும் இந்த எளிய வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகளை செய்கிறது. வெங்காயத்தில் என்னதான் உடலுக்கு நன்மைபயக்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தாலும், பச்சையாக வெங்காயம் சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும்.  மேலும் பச்சையாக வெங்காயம் சாப்பிடும்போது வாயில் இருந்து வீசும் மணம் பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெண்கள் ஹீமோகுளோபின் குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More