Home> Health
Advertisement

கருப்பு மிளகு: புற்றுநோய் முதல் எடை இழப்பு வரை.... அட்டகாசமான வீட்டு வைத்தியம்

Health Tips: மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு அனைவரின் சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டுவதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. 

கருப்பு மிளகு: புற்றுநோய் முதல் எடை இழப்பு வரை.... அட்டகாசமான வீட்டு வைத்தியம்

Health Tips: நம் வீட்டு சமையறைகளில் பல மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உணவின் சுவையை அதிகரிப்பதுடன் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இவற்றை தினமும் நம் உணவில் பயன்படுத்தி வந்தால், இவற்றின் நற்குணங்களும் ஆரோக்கிய பண்புகளும் நம் உடலின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும். 

கரு மிளகின் நன்மைகள் (Health Benefits of Black Pepper):

மசாலாப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும் கருப்பு மிளகு அனைவரின் சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய மசாலா ஆகும். உணவின் சுவையை கூட்டுவதுடன் இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த மசாலாவில் சில இரசாயன கூறுகள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கருப்பு மிளகு உட்கொள்வதால் நம் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

கருப்பு மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றுடன் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் காணப்படுகின்றன. இதன் காரணமாக இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கருப்பு மிளகாயின் சில முக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1. கருப்பு மிளகு புற்றுநோயைத் தடுக்கிறது: 

கருப்பு மிளகு வைட்டமின் சி, ஏ, கரோட்டின் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. மேலும் மிளகு நம்மை புற்றுநோய் (Cancer Prevention) மற்றும் பல நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

2. செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது: 

செரிமானம் (Digestion) தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், நீங்கள் கருப்பு மிளகு சாப்பிடலாம். கருப்பு மிளகில் காணப்படும் பைப்பரின் செரிமான செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இது வயிற்றைத் தூண்டுகிறது, இதன் காரணமாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிக அளவில் சுரக்கப்படுகிறது. இது உணவை ஜீரணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்க | காய்கறிகளின் தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகிறீர்களா... இந்த செய்தி உங்களுக்கு தான்..!

3. சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது: 

இருமல் (Cough) மற்றும் சளியால் அவதிப்படுபவர்கள் கருப்பு மிளகு சாப்பிடுவதால் இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கருப்பு மிளகு இயற்கையாகவே ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது இருமல் மற்றும் சளியைக் குணப்படுத்த உதவுகிறது.

4. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்

கருப்பு மிளகின் வெளிப்புற அடுக்கில் பைட்டோநியூட்ரியண்ட்கள் காணப்படுகின்றன. இந்த பைட்டோநியூட்ரியண்ட்ஸ் கொழுப்பு செல்களை உடைக்கும் பணியை செய்கின்றன. இது தவிர, கருப்பு மிளகு உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, இது எடை இழப்பை (Weight Loss) எளிதாக்குகிறது. இதை பல உணவுகளில் நாம் சேர்க்கும்போது இதில் இருக்கும் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. 

5. மன அழுத்தத்தை நீக்குகிறது: 

கருப்பு மிளகாயில் காணப்படும் பைப்பரின் கவலை மற்றும் மன அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இது தவிர, மூளையை செயல்படுத்தி நாம் சரியாக செயல்பட உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நோ சுகர் டயட்: சர்க்கரைக்கு மட்டுமல்ல... இதற்கெல்லாம் கூட 'நோ' தான், சாப்பிடவே கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More