Home> Health
Advertisement

ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்து! பகீர் எச்சரிக்கை!

How To Use Antibiotics: பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றை அதிகமாக பயன்படுத்துவது உடல்நலனுக்கு தீங்குகளை ஏற்படுத்தும்

ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்து! பகீர் எச்சரிக்கை!

உடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றை அதிகமாக பயன்படுத்துவது உடல்நலனுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும், இது தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். மருந்துகள் இல்லாமல் குணப்படுத்த முடியாத சில நோய்கள் உள்ளன. இந்த நோய்களில் முக்கியமாக சில வகையான பாக்டீரியா தொற்றுகள் அடங்கும், ஏனெனில் அவற்றை வேரிலிருந்து சிகிச்சையளிக்க, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படுகின்றன.

பாக்டீரியா தொற்றுகளை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் மட்டுமே குணப்படுத்த முடியும். நோய்க்கான சிகிச்சையின்போது, மருந்துகளை சரியான அளவில், சரியான நேரத்தில் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பின்பற்றினால், மருந்துகள் முற்றிலும் பாதுகாப்பானவை. ஆனால், தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ளத் தொடங்குவது பிரச்சனைகளை அதிகமாக்குகின்றன.

உடல்நலம் தொடர்பான எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையளிக்க, மக்கள் தாங்களாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுக்கத் தொடங்குகிறார்கள், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த ஆண்டிபயாடிக் மருந்தையும் உட்கொள்வது அல்லது இந்த மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொள்வது (taking too many antibiotics) சில சமயங்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு, உடலில் பல நோய்களையும் உண்டாக்கும், அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | இறைச்சி, மீனை விட அதிக ஆற்றலை கொடுக்கும் டாப் ‘5’ சைவ உணவுகள்!

நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் ஏற்படும் நோய் 
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பணி உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுவது. ஆனால் நோய்த்தொற்றின் படி ஒரு நபர் அதிக அளவில் அல்லது பொருத்தமற்ற முறையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொண்டால், அவை உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். அதுமட்டுமல்ல, மருந்துகள், நோயை போக்கும் வேலையை செய்யமுடியாமல், உடலில் தொற்று தொடர்ந்து அதிகரித்து, பல சிக்கல்களும் உருவாகின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஆண்டிபயாடிக் எதிர்வினையாற்றுவதை தவிர்ப்பதற்கான மிக முக்கியமான வழி, மருத்துவரின் ஆலோசனையின்றி சொந்தமாக எந்த ஆண்டிபயாடிக் அல்லது எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் எந்த ஆண்டிபயாடிக் மருந்தையும் மருத்துவர் எவ்வளவு நால் பயன்படுத்த சொல்லியிருக்கிறாரோ அதுவரை மட்டுமே பயன்படுத்தவும், அதைவிடக் குறைவாகவோ அல்லது அதிக காலத்திற்குஎடுத்துக்கொள்ளவோ ​​கூடாது. குடும்பத்தில் வேறு யாருக்காவது கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். இதுவும் நோய் பாதிப்பை உண்டாக்கும்.

விழிப்புணர்வு
பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் உள்ளன மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் சிக்கல்களை மட்டுமே களைகின்றன. எனவே, உடலில் தொற்று இருந்தால், அது எந்த தொற்று என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், பாக்டீரியா தொற்று பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது மற்றும் மருந்தின் அளவு அதன் தீவிரத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது. எனவே, முதலில் பிரச்சனை என்ன என்பதை ஆய்வு செய்வது மிகவும் முக்கியம். பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து மருந்துகளை பயன்படுத்துவது, அவற்றின் பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஓவர் திங்கிங் உடம்புக்கு நல்லதில்ல! நீண்ட ஆயுளுடன் வாழும் ஜப்பானியர்களின் இந்த டெக்னிக் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More