Home> Health
Advertisement

எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

நமது உடலில் அதிசயமான உறுப்புகள் பல இருந்தாலும் அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது கல்லீரல் எனலாம்.  எனெனில், கல்லீரல் தன்னை தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் திறன் படைத்த ஆச்சரியமான உறுப்பாகும். 

எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

நமது உடலில் அதிசயமான உறுப்புகள் பல இருந்தாலும் அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது கல்லீரல் எனலாம்.  எனெனில், கல்லீரல் தன்னை தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் திறன் படைத்த ஆச்சரியமான உறுப்பாகும். கல்லீரலின் வேலை உடலை சுத்திகரிப்பு செய்வது.  உடலில் உள்ள அனைத்து ரத்தத்தையும் வடிகட்டும் முக்கிய பணியை செய்யும் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்[படும் என்றால் மிகையில்லை. இது உடலில் உள்ள அழுக்குகளை நீக்குவதன் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உணவு செரிக்க தேவையான பித்தநீர், ரத்தம் உறைவதற்கு உதவும் ரசாயனம் உள்ளிட்டவற்றை கல்லீரல் தான் நமக்கு வழங்குகிறது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்யும் திறன் கொண்ட கல்லீரலை பத்திரமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். 

நமது  கல்லீரல் பாதிப்பு  என்பது உடனடியாக ஏற்படாது, உங்கள் வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உங்கள் உணவில் கவனம் செலுத்தாமல் இருக்கும் போது, இந்த வகையான பிரச்சனை ஏற்படுகிறது.  கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்சனை குறிப்பாக அதிக கொழுப்பு உணவுகளை உண்பவர்களுக்கும், ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு சேர்க்கிறது. கல்லீரல் உயிரணுக்களில் இயல்பை விட அதிக கொழுப்பு சேர்வதால் பல பிரச்சனைகள் ஏற்படும். எதிர்காலத்தில், இது பல வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது கல்லீரல் செயலிழப்பிற்கும் வழி வகுக்கலாம். 

கல்லீரல் சேதமடைவதற்கு முன், உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படும். அது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளை அறிந்து கொண்டால், எதிர்காலத்தில்  ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

1. தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிமால், நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கும்.  ரத்த சிவப்பணுக்கள் சிதைவதால் உருவாகும் ஒரு சேர்மம் பிலிரூபின். இதனை கல்லீரலால் நீக்க முடியாது. இதனால் ரத்த ஓட்டத்தில் அதிக அளவு பிலிரூபின் கலக்க வழிவகுக்கிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறது. தொடர்ந்து  மஞ்சள் நிறம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி 

2. பாதங்களின் வீக்கம்

சில சமயங்களில், பாதங்களில் வீக்கம் ஏற்படும் போது சிலர் அலட்சியம் செய்வார்கள். இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் பெரும் சிக்கலில் சிக்க நேரிடும்.  கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கால் வீக்கம் என்பதால், இதுபோன்ற நிலையை அலட்சியம் செய்யாதீர்கள்.

3. சிறுநீரின் நிறம்

ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் சேர்மம் அதிகரித்தால் வெளியேறும் சிறுநீரும் அடர் மஞ்சள் நிறமாக இருக்கும். உங்கள் சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  இல்லையெனில் கல்லீரல் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க | கல்லீரலை பாதித்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் கலப்பட டீ! கண்டுபிடிப்பது எப்படி!

4. அதிகப்படியான சோர்வு

கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகளில் ஒன்று சோர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். அத்தகைய சூழ்நிலையில், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

கல்லீரலில் கொழுப்பு சேர்ந்தால், உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்துவது மற்றும் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் எளிதாக அகற்றலாம். ஆனால் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More