Home> Health
Advertisement

எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்

சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.  

எலும்புகள் வலுவாக இருக்க... கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்

நமது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் என்னும் ஊட்டச்சத்து மிக அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரியும். சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.

வைட்டமின் டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

நாம் உண்ணும் உணவுகளில் இருந்து, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சிக் கொள்ளவதற்கு, வைட்டமின் டி மிக அவசியம். வைட்டமின் டி இல்லையென்றால், கால்சியம் நிறைந்த உணவுகளை எவ்வளவு அதிகம் உண்டாலும், உடலில் கால்சியம் சத்து சேராது. வைட்டமின் டி சத்து இல்லாமல் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது (Health Tips) சிறிதும் பலன் அளிக்காது.

எலும்புகள் வலுவாக இருக்க சாப்பிட வேண்டியவை (Foods To Eat For Bone Health)

எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க, கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த பால், தயிர், பாலாடை கட்டி, கீரை உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள், ப்ரோக்கலி, சோயா பீன்ஸ் ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு வைட்டமின் டி சத்து கிடைக்க, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் உணவுகள், முட்டையின் மஞ்சள் கரு, காளான்கள் ஆகியவற்றை கொள்ள வேண்டும்.

எலும்புகள் வலுவாக இருக்க தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் ( Nutrients Essential For Bone Health)

கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துடன், புரதச்சத்தும் எலும்பு வலுவாக இருக்க அவசியம். எலும்புகளின் சுற்றி உள்ள திசு மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு, புரதச்சத்து மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. முட்டை, பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள் குறிப்பாக சோயா பீன்ஸ் ஆகியவை புரதச்சத்து நிறைந்த சில உணவுகள். அதோடு மெக்னீசியம் சத்து எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. அதேபோன்று பொட்டாசியம் சத்து, எலும்புகளில் உள்ள தாதுச் சத்துக்கள் குறையாமல் பராமரிக்க உதவுகிறது. இதனைப் பெற கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகள், நட்ஸ் வகைகள், பீன்ஸ் வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

எலும்புகள் வலுவாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods To Avoid For Bone Health)

எலும்புகள் வலுவாக இருக்க சில உணவுகளை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பது போல், நிச்ச்யம் தவிர்க்க வேண்டிய உணவுகளும் சில உள்ளன. அதில் அளவுக்கு அதிகமான சர்க்கரை, அளவிற்கு அதிகமான உப்பு கொண்ட துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை எலும்புகளில் இருந்து கால்சியம் சத்தை உறிஞ்சி, எலும்புகளை உள்ளிருந்து சல்லடையாக்கிவிடும்.

எலும்புகள் வலுவாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை (Lifestyle Changes for Bone Heath)

எலும்புகள் வலுவாக இருக்க உணவு முறையுடன், உடற்பயிற்சியும் அவசியம். தினமும் குறைந்தது அரை மணி நேர உடற்பயிற்சி, எலும்புகள் வலுவாக இருக்க உதவும். இதனால் மூட்டு வலி ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். புகைபிடித்தல், ஆல்கஹால் போன்ற பழக்கங்களும் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும். மதுப்பழக்கம், கால்சியம் சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். எப்போதாவது அருந்துவது பிரச்சனை இல்லை. ஆனால் மது அருந்துவதை வழக்கமாக கொண்டால், எலும்புகள் சல்லடை ஆகிவிடும் என்பது உறுதி.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More