Home> Health
Advertisement

Body Detox: உடலின் நச்சுக்களை நீக்கும் நார்ச்சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து உணவை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்யலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.

Body Detox: உடலின் நச்சுக்களை நீக்கும் நார்ச்சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது., ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுகளும் வெளியேற்றப்படுகின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை.

நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. நார்சத்து நிறைந்த பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

2. பொதுவாக நாம் உணவில் அக்கறை காட்டுவதில்லை. வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடல் நலத்தை மோசமாக்குகிறது. மேலும், வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன.

3. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் குடிப்பதும் நன்மை பயக்கும். நாள் முழுவதும் 3-4 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் இருக்கும்.

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

4. நார்ச்சத்து நிறைந்த உணவு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன்,  நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

5. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. 

6. உடலில் நார்ச்சத்து இல்லாததால் செரிமானம் சரியாக நடைபெறாது. இதனால் உடலில் கொழுப்பு வேகமாக சேரத் தொடங்குகிறது. நார்ச்சத்து உடலின் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

7. மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற கடுமையான நோயை ஏற்படுத்தும், எனவே மலச்சிக்கலை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உடலில் நார்ச்சத்து இல்லாதது மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணம் .

நார்ச்சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்

1. ஸ்ட்ராபெர்ரி
2. பச்சை பட்டாணி
3. ப்ரோக்கோலி
4. உருளைக்கிழங்கு
5. பருப்பு வகைகள்
6. முட்டைக்கோஸ்
7. கேரட்
8. ஓட்ஸ்
9. ஆரஞ்சு
10. பாதாம்
11. சியா விதைகள்
12. பேரிக்காய்
13. வாழைப்பழம்
14. ஆப்பிள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More