Home> Health
Advertisement

இதெல்லாம் பக்கவாதம் வருவதற்கான காரணங்களா? முதல்ல ஒல்லியாகனும்

Brain Stroke Facts: பருமனாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பக்கவாதம் தொடர்பான சில விஷயங்கள் பொதுவாக பலருக்கு தெரிவதில்லை

இதெல்லாம் பக்கவாதம் வருவதற்கான காரணங்களா? முதல்ல ஒல்லியாகனும்

பக்கவாதம் மற்றும் அதன் பக்கவிளைவுகள்: அதிக எடை அல்லது பருமனாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும். உடல் உழைப்பின்மை, புகையிலை பயன்பாடு மற்றும் ஆல்கஹால் பயன்பாடு ஆகியவை பக்கவாதத்திற்கான ஆபத்து காரணிகளாகும். உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம்.

இரத்த நாளங்கள் (இஸ்கிமிக் ஸ்ட்ரோக்) தடுக்கப்பட்ட அல்லது குறுகலான பக்கவாதம் அல்லது மூளையில் உள்ள இரத்த நாளங்களின் கசிவு அல்லது சிதைவு (ஹெமரேஜிக் ஸ்ட்ரோக்) காரணமாக பக்கவாதம் ஏற்படலாம். பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்,

மூளை பாதிப்பு மற்றும் செயல்பாடமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பக்கவாதம் ஏற்படாமல் கவனமாக இருப்பது அவசியமாகும். பக்கவாதம் பற்றிய தெரிந்துக் கொள்ளவேண்டிய சில உண்மைகள் இவை...

மேலும் படிக்க | சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க 7 வழிகள்

பக்கவாத பாதிப்புகள் அதிகமாக உள்ள நாடுகள்
உலகளவில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் அதிகபட்ச பக்கவாதம் (70%) மற்றும் பக்கவாதம் தொடர்பான இறப்புகள் (87%) நிகழ்கின்றன.

கோவிட்-19 தொற்று பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது
கோவிட்-19 தொற்று கடுமையான இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கின் அபாயத்தை அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன

fallbacks

ஆண்களை விட பெண்கள் பக்கவாதத்தால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்
பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம், ஆனால் ஆண்களை விட பெண்களே பக்கவாதத்தால் இறக்கும் வாய்ப்பு அதிகம்.

மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பக்கவாதம் ஆபத்தை அதிகரிக்கும்
பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அல்லது ஹார்மோன் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம், குறிப்பாக அவர்களுக்கு புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பக்கவாத ஆபத்து காரணிகள் இருந்தால்.மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  

குழந்தைகளுக்கு கூட பக்கவாதம் வரலாம்
குழந்தை பக்கவாதம் ஒரு அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. பக்கவாதத்தின் அறிகுறிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் ஒரே மாதிரியானவை.\

மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து!

மேலும் படிக்க | கொரோனாவின் அக்டோபஸ் கரங்களில் சீனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More