Home> Health
Advertisement

அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதும்

Control Uric Acid With Ayurveda: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில இலைகள் மிகவும் ஆரோக்கியமானவை. அந்த சிறப்பு இலையை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்-

அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க இந்த ஒரு வீட்டு வைத்தியம் போதும்

Control Uric Acid : யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் இருக்கும் ஒரு கழிவுப் பொருளாகும், இது உடலில் உள்ள பியூரின்கள் எனக் பொருட்களின் முறிவால் உருவாகிறது. யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி இரத்தத்தில் கரைகிறது, இது சிறுநீரகங்கள் வழியாக இரத்தத்தின் வழியாக உடலில் இருந்து வெளியேறுகிறது. ஆனால் சில சூழ்நிலைகளில், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​சிறுநீரகங்களால் அதை சரியாக வடிகட்ட முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதிப்பு மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்த, நாம் சரியான உணவுப் பழக்கங்களின் உதவியைப் பெறலாம். எனவே இன்று இந்தக் கட்டுரையில் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க ஒரு சிறந்த இலையைப் (Which leaves reduce uric acid?) பற்றி தான் காணப் போகிறோம். அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த கொத்தமல்லி இலை:
யூரிக் அமில அளவைக் (Uric Acid Home Remedies) கட்டுப்படுத்த கொத்தமல்லி இலைகள் நன்மை பயக்கும். ஏனெனில் இவற்றில் உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை அகற்றவும் உதவும். அதுமட்டுமின்றி கொத்தமல்லி இலையில் உள்ள பண்புகள் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். எனவே இந்த இலைகளை எந்த முறையில் பயன்படுத்தினால் யூரிக் அமில அளவை கட்டுபடுத்த முடியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | விந்தணுவில் உயிர் வாழும் கொரோனா வைரஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

யூரிக் அமிலத்தை குறைக்க கொத்தமல்லி இலையை எப்படி பயன்படுத்துவது?

கொத்தமல்லி இலையில் தயார் செய்யப்பட்ட தேநீர்: காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலை (Coriander Leaf) தேநீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. இதற்கு ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை 2 கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கொத்தமல்லி இலையில் செய்யப்பட்ட சட்னி: இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க கொத்தமல்லி இலை சட்னியை உட்கொள்ளலாம். இதற்கு ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தக்காளி, இரண்டு முதல் மூன்று பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த சட்னியி நீங்கள் ரொட்டி, தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலில் சேர்ந்திருக்கும் அதிக அளவு யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்.

யூரிக் அமிலத்தின் ஆரம்ப கால அறிகுறிகள்: 
இரத்தத்தில் அதிக யூரிக் அமிலம் கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. பின் இவற்றின் காரணமாக மூட்டுவலி, வீக்கம், குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கசிதல், முதுகில் வலி, எழுந்து உட்காருவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயில் லாஸ் வர ... பட்டையை கிளப்பும் இலவங்கப்பட்டை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More