Home> Health
Advertisement

காது வலி பாடாய் படுத்துதா: இப்படி செஞ்சி பாருங்க, நிவாரணம் கிடைக்கும்

Ear Pain Remedies: காது வலியால் பிரச்சனையா? இந்த எளிய வழிகளின் மூலம் நிவாரணம் பெறலாம். நீங்களும் செய்து பாருங்கள்.

காது வலி பாடாய் படுத்துதா: இப்படி செஞ்சி பாருங்க, நிவாரணம் கிடைக்கும்

காது வலிக்கான வீட்டு வைத்தியம்: காதுவலி மற்ற வலிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. ஏனெனில் இது நமது மூளையை நேரடியாக பாதிக்கிறது. இதனால் எந்த ஒரு சாதாரண வேலையையும் செய்வது கடினமாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் சிறந்ததாகும். 

எனினும், உடனடியாக நாம் மருத்துவர்களிடம் செல்ல முடியாத சில சந்தர்பங்களும் ஏற்படுகின்றன. காது வலி இருந்து, மருத்துவமனைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, வீட்டிலேயே அதை சரிசெய்ய விரும்பினால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் காது வலியை சரி செய்யலாம். 

காது வலியைப் போக்க எளிய வைத்திய வழிகள்

1. தூங்கும் முறை

உங்களுக்கு பக்கவாட்டில் தூங்கும் பழக்கம் இருந்தால், காதுகளில் அழுத்தம் ஏற்படாமல், தலையில் அழுத்தம் விழுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். காதில் அழுத்தம் ஏற்பட்டால், வலி உருவாகும், ஏற்கனவே வலி உள்ளவர்களுக்கு வலி அதிகரிக்கும். ஆகையால் தூங்கும் நிலை மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் இந்த நன்மைகளை பற்றி தெரிந்தால் இதை சாப்பிடாமல் இருக்க முடியாது

2. குளிர் ஒத்தடம் 

சூடான ஒத்தடம் பல வித வலிகளுக்கு நிவாரணம் தருவது போல, குளிர் ஒத்தடமும் நிவாரணம் அளிக்கின்றது. இதன் மூலம் நிவாரணம் பெற, ஐஸ் பேக்கை காதை சுற்றி வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வலியிலிருந்து விரைவில் விடுபடலாம்.

3. சூடான ஒத்தடம் 

காதில் கடுமையான வலி ஏற்படும் போதெல்லாம், ஹீடிங் பேட் அல்லது ஹாட் வாட்டர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். சுமார் அரை மணி நேரம் இப்படி செய்தால், காதைச் சுற்றியுள்ள தசைகள் தளர்வதால், வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

4. ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால் இதனால் காது வலியையும் குணப்படுத்த முடியும் என்பது பலருக்குத் தெரியாது. காதுகளில் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை விட்டால், நிவாரணம் கிடைக்கும். 

5. சூயிங் கம்

பல நேரங்களில் விமானப் பயணத்தின் போது காதுகளில் கடுமையான வலி ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சூயிங்கம் மெல்லலாம். அவ்வாறு செய்வதன் மூலம், வலியிலிருந்து விடுபடலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காளான் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா: வியக்க வைக்கும் ஹெல்த் டிப்ஸ் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More