Home> Health
Advertisement

தொண்டை எரிகிறதா... இந்த 5 எளிய வழிகள் மூலம் வீட்டிலேயே குணப்படுத்தலாம்!

Burning Throat: தொண்டையின் உள்ளே எரியும் உணர்வு ஏற்படுவது போன்ற அசௌகரியங்களை வீட்டிலேயே எளிய வழிமுறைகளை பின்பற்றி தவிர்க்கவும், குணப்படுத்தவும் முடியும். 

தொண்டை எரிகிறதா... இந்த 5 எளிய வழிகள் மூலம் வீட்டிலேயே குணப்படுத்தலாம்!

Burning Throat Home Remedies: தொண்டையின் உள் எரியும் உணர்வு சிலருக்கு ஏற்படும். அது பல காரணிகளால் ஏற்படலாம். நெஞ்செரிச்சல், காரமான உணவுகளை உண்பது அல்லது சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாகவும் ஏற்படலாம். இந்த அறிகுறி எந்த தீவிர நோய்களையும் குறிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஆனால் இது மிகவும் வேதனை அளிக்க கூடிய ஒன்று. இதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும். சிலருக்கு சாப்பிடுவதில் அல்லது பேசுவதில் சிரமம் ஏற்படும். இருப்பினும், இதனை வீட்டிலேயே எளிதாக குணப்படுத்த முடியும்.

வீட்டிலேயே குணப்படுத்த 5 எளிய வழிகள்:

சூடான நீரில் வாய் கொப்பளிக்கவும்

வெதுவெதுப்பான சூட்டில் உள்ள நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை பிரச்சனைகளைத் தவிர்க்க அல்லது குணப்படுத்த உதவும். உப்பு சேர்ப்பதால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உப்பு தொண்டை திசுக்களில், திரவத்தை வெளியிடுகிறது. இந்த திரவம் வைரஸை அகற்ற உதவுகிறது. சளி தன்னை வெளியேற்ற அனுமதிக்கிறது. சூடான நீர் வாய் கொப்பளிப்பது அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்கவும் மற்றும் இரைப்பை குடல் அசௌகரியத்தை எளிதாக்கவும் உதவும். இது தவிர, உங்களைிடம் தண்ணீர் சத்து வைத்திருக்கவும் உதவும். உங்கள் தொண்டையில் எரிச்சலைத் தவிர்க்க, நாள் முழுவதும் உங்களால் முடிந்த அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீர் அல்லது தேநீருடன் தேன்

தொண்டையில் எரியும் பிரச்னையை அனுபவிக்கும் மக்கள், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மூலம் தேன் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை (Allergy) எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த பண்புகள் தொண்டையில் எரியும் உணர்வை ஏற்படுத்தக்கூடிய வைரஸ், பாக்டீரியாவைக் கொல்லும். நீங்கள் தேனை வேறு எந்த பானத்திலும் கலக்காமல் குடிக்கலாம். ஆனால், வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை டீயுடன் குடித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | சுகர் இருக்கா? அப்போ இந்த உணவுகளை இன்றே சாப்பிடுவதை நிறுத்தவும்

குளிர்ந்த பால்

இது சிலருக்கு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம். ஆனால், குளிர்ந்த பால் நெஞ்செரிச்சல் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இது ஒரு குளிர்ச்சியான விளைவை அளிக்கிறது, இது வலி மற்றும் அசௌகரியத்தை எளிதாக்கும். குளிர்ந்த பாலில் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, இது செரிமான பிரச்சனைகள் மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது தொண்டை வீக்கம் மற்றும் புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.

புதினா

மிளகுக்கீரை என்றழகைப்படும் புதினா, அதன் ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல் மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸால் ஏற்படும் எந்த வகையான தொற்றுநோயையும் குணப்படுத்தும். வயிற்றில் அமிலம் உற்பத்தி, நெஞ்செரிச்சல் அறிகுறிகளைக் குறைப்பதிலும் புதினா பயனுள்ளதாக இருக்கிறது.

காரமற்ற மென்மையான உணவு சாப்பிடுங்கள்

உங்கள் தொண்டையில் எரியும் உணர்வுகளைப் போக்க உதவும் மென்மையான உணவு, ஒரு நல்ல தேர்வாகும். இந்த அறிகுறியைப் போக்கக்கூடிய உணவுகள் முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், இஞ்சி மற்றும் ஓட்ஸ் ஆகியவன. மூலிகை சாறு சூப் மற்றும் காஃபின் இல்லாத பானங்கள் போன்ற லேசான உணவுகளும் அறிகுறிகளைக் குறைக்க உதவும். இருப்பினும், எந்த உணவு அல்லது பானத்திலும் அதிகமாக சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்த ஆலோசனை ஆரம்ப தகவல்களுக்கு மட்டுமே. எனவே மருத்துவ ஆலோசனை இல்லாமல் நேரடியாக சிகிச்சை அளிப்பதை தவிர்க்கவும். எந்தவொரு உடல் வலியையும் புறக்கணித்து சுய மருந்து செய்வது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது) 

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை 7 நாட்களில் குறைக்க வேண்டுமா? இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More