Home> Health
Advertisement

இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!

இரட்டை கன்னத்திற்கான பயிற்சிகள்: இரட்டை கன்னத்தில் இருந்து விடுபட எளிதாக மேற்கொள்ளக்கூடிய சில பயிற்சிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!

கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிக அளவில் சேரும் போது ‘இரட்டை கன்னம்’ உண்டாகி முக அழகைக் கெடுக்கும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முக தோற்றத்தையே மாற்றியமைத்து விடும். உங்கள் கன்னத்தின் கீழ் உள்ள கூடுதல் கொழுப்பு உங்களையும் தொந்தரவு செய்கிறதா? அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்களுக்கு இரட்டை கன்னம் நீங்கி அழகான தாடையைப் பெற விரும்பினால், இரட்டை கன்னத்தை அகற்ற விரும்பினால், உங்கள் வழக்கமான சில பயிற்சிகளை நீங்கள் செய்வது மிகவும் பலன் அளிக்கும். இரட்டை கன்னத்தில் இருந்து விடுபடக்கூடிய சில பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

கீழ்கண்ட பயிற்சிகளின் மூலம் அழகான தாடையை பெறுலாம்:

முதல் பயிற்சி:

முதல் பயிற்சியைச் செய்ய, உங்கள் முதுகை நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு உங்கள் முகத்தை மேல் நோக்கி நீட்டவும். இதன் பிறகு முகத்தை கீழே இறக்கவும். இந்த பயிற்சியை 10 முறை செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் இரட்டை கன்னத்தில் இருந்து விடுபடலாம். முகத்திற்கான சிறந்த பயிற்சியாக இருக்கும்.

இரண்டாவது பயிற்சி:
 
இந்த பயிற்சி மிகவும் எளிதானது. இதைச் செய்ய, நீங்கள் முதுமை நேராக வைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார வேண்டும். பின்னர் உங்கள் வலது கையை இடது கன்னத்தில் வைக்கவும். அதன் பிறகு உங்கள் கழுத்தை வளைத்து முகத்தை கீழ் நோக்கி தள்ள முயற்சிக்கவும், மறுபுறம் அதையே மீண்டும் செய்யவும்.

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

மூன்றாவது பயிற்சி :

இரட்டைக் கன்னத்தைக் குறைக்க இந்தப் பயிற்சியையும் செய்யலாம். இதைச் செய்ய, நீங்கள் நேராக உட்காருங்கள். அதன் பிறகு, உங்கள் வாயில் காற்றை நிரப்பவும். சுமார் 30 நொடிகள் அப்படியே வைத்துக் கொண்ட பின், மாறி மாறி வலது மற்றும் இடது பக்கமாக வாயில் உள்ள காற்றை ஊதவும். இதை நீங்கள் குறைந்தது 30 வினாடிகள் செய்ய வேண்டும். இது உங்கள் கன்னங்களை மெலிதாக மாற்ற உதவுகிறது.

நான்காவது பயிற்சி:

இந்தப் பயிற்சியைச் செய்ய, உங்கள் உதடுகளை விரித்து, இப்போது நாக்கை ஒரு பக்கமாகத் திருப்பி, பின்னர் மெதுவாக கீழே இறக்கவும். இந்த பயிற்சி கன்னங்களை குறைக்கவும், தாடையை குறைக்கவும் சிறந்தது.

முக யோகா செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன. இவை அனைத்தின் நோக்கமும் முகத்திற்கான பயிற்சி. இதன் காரணமாக, முக இயக்கங்கள் அதிகரித்து, படிப்படியாக நீங்கள் விரும்பிய பலனைப் பெறத் தொடங்குவீர்கள். 

மேலும் படிக்க | முகத்தில் தொங்கும் சதைகள் அழகை கெடுக்கிறதா... இறுக்கமாக்க சில எளிய வழிகள்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More