Home> Health
Advertisement

பூண்டு சாப்பிட்டால் கொலஸ்டராலின் அளவு குறையுமா? உண்மை என்ன?

நோய் எதிர்ப்பு சக்தி, எல்டிஎல் கொழுப்பின் குறைவு மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு போன்றவற்றிற்கு அல்லிசின் நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.   

பூண்டு சாப்பிட்டால் கொலஸ்டராலின் அளவு குறையுமா? உண்மை என்ன?

பூண்டுகளை சாப்பிடுவதால் உடலிலுள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  ஆனால் அதேசமயம் பூண்டு நிறைந்த சப்ளிமெண்ட்ஸை சாப்பிடுவதால் உடலுக்கு சில எதிர்மறை விளைவுகள் மற்றும் சில ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது என்று கூறப்படுகிறது.  பல ஆராய்ச்சிகளின் படி பூண்டு உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.  லிப்போபுரோட்டின்கள் எனப்படும் இரண்டு புரதங்கள் உடலில் இரத்தம் முழுவதும் கொலஸ்ட்ராலை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.  எல்டிஎல் எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதங்கள் உடலில் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலை உண்டுபண்ணுகின்றன.  ஒருவரது உடலில் அதிகளவு எல்டிஎல் கொழுப்பு புரதங்கள் இருந்தால் அவருக்கு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.  

மேலும் படிக்க | இந்த வகை ரத்தம் உள்ளவர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படலாம்! ஜாக்கிரதை!

ஹெச்டிஎல் எனப்படும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்கள் கொலஸ்ட்ராலை எடுத்துக் கொள்கின்றன, இவை இதயம் தொடர்பாக ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கின்றன.  நாம் சில வகையான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம், அந்த வகையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. பூண்டு ஒரு நபரின் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.  இதில் பெரும்பாலான ஆய்வுகள் பூண்டை சாப்பிடுவதால் உடலிலுள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது என்பதை நிரூபித்துள்ளது.

fallbacks

அல்லின் என்பது பூண்டு குமிழ்களில் காணப்படும் ஒரு வேதிப்பொருள், அல்லியின் காற்றில் வெளிப்படும் போது அல்லிசின் என கந்தக அடிப்படையிலான பொருளாக மாறுகிறது.  பூண்டில் வாடை ஏற்படுவதற்கு இந்த அல்லிசின் தான் முக்கிய காரணமாக உள்ளது.  நோய் எதிர்ப்பு சக்தி, எல்டிஎல் கொழுப்பின் குறைவு மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு போன்றவற்றிற்கு அல்லிசின் நிவாரணம் அளிப்பதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.  பூண்டின் வகையை பொறுத்து அல்லிசின் அளவிலும் மாறுபாடு ஏற்படுகிறது.  முதிர்ந்த பூண்டின் சாறுகள், மற்ற வகை பூண்டுகளுடன் ஒப்பிடும்போது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் சிறந்த நன்மைகளை வழங்குகிறது.  பூண்டு எண்ணெய் மற்றும் தூள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, கருப்பு பூண்டு சாறு கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.  பூண்டினால் ஒவ்வாமை உள்ள சிலருக்கு இதனை சாப்பிட்டதும் தோல் அலர்ஜி போன்றவை ஏற்படலாம், இதுதவிர வேறு ஆபத்தான விளைவுகள் எதுவும் ஏற்பட்டுவிடாது.  மேலும் அன்றாட உணவில் பூண்டைச் சேர்ப்பதன் மூலம் பலவிதமான நன்மைகளை நீங்கள் பெறமுடியும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்: டயட் பிளான் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More