Home> Health
Advertisement

மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!

பலருக்கு, தங்களின் இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எங்கிருந்து எப்படி அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ், இதோ!  

மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை பார்த்துக்கொள்ள..5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!

கடந்த சில வருடங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளும், மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இளம் வயதினர் என்றால், 30களில் 40களில் இருப்பவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். 20களில் இருப்பவர்களில் இருந்து, 8வது 7வது படிப்பவர்கள் வரை, யாரையுமே பலரின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது, மாரடைப்பு. இதற்கு காரணம், நம் அன்றாட வாழ்க்கை முறையாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாரடைப்பு பாதிப்பு நமக்கு ஏற்படாமல் தடுக்க, பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், யோகாசனம். 

யோகாசனம்:

இந்தியர்களின் பாரம்பரிய முறைகளில், இன்றியமையாத ஒன்றாக இருப்பது, யோகாசனம். உலகளவில் பிரபலமான இந்த வகை உடற்பயிற்சி, ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. உடலின் பல்வேறு பாகங்களை காக்கும் இந்த யோகாசனம், இதயத்தையும் காக்கும் என மருத்துவர்களால் நம்பப்படுகிறது. தினமும், ஒரு சில யோகாசனங்களை செய்தால் நமது உடல் வலுப்பது மட்டுமன்றி, இதயத்தையும் பாதுகாக்கும் என கூறப்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் யோகாவின் பங்கு!

உடல் பருமன், இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது. உடல் செயல்பாடுகளை, உணவுப் முறைகளுடன் இணைத்து ஆரோக்கியமான எடையை பாலன்ஸ் செய்ய உதவுகிறது,யோகா பயிற்சி. இது, எடை இழப்பிற்கு உதவுவது மட்டுமன்றி, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதய நோய்களுக்கு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், குடல் வீக்கம் உள்ளிட்ட பல காரணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து விடுபட, யோகா உதவுகிறது. 

மேலும் படிக்க | ஞாபக மறதி அதிகமா இருக்கா? ‘இந்த’ யோகாசனம் செய்து பாருங்கள்- எல்லாம் சரியாகிடும்..

fallbacks

மருத்துவ ஆய்வு:

யோகா, இதய நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறதா, இல்லையா என்ற ரீதியில் சில மருத்துவ ஆய்வுகளும் நடத்தப்பட்டன. அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், இது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது. அதில், இருதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும், இரத்த அழுத்தம், கொழுப்பு, உள்ளிட்டவற்றை யோகா குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. யோகா செய்பவர்களை வைத்து, 12 வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. யோகாவுடன் சேர்த்து கார்டியோ உடற்பயிற்சிகள், ஏரோபிக் உடற்பயிற்சிகள் உள்ளிட்டவற்றையும் செய்தால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. 

தினமும் யோகா செய்வது எப்படி?

நவீன கால சூழலில், பலரால் சரியாக யோகாசனம் செய்ய இயல்வதில்லை. தினமும் யோகாவை நம் வாழ்வில் இணைத்துக்கொள்ள, சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 

>தினமும் 10 முதல் 15 நிமிடங்களுகு முதலில் யோகாசனம் செய்து பழக வேண்டும். இப்படி பழகினால், சில நாட்களுக்குள்ளாகவே யோகா உங்களுக்கு பழகிவிடும் என கூறப்படுகிறது.

>யோகாவில் பல வகைகள் இருக்கின்றன. உங்கள் உடலுக்கு எந்த வகை ஆசனம் சரியாக இருக்குமோ அந்த வகை ஆசனத்தை தினமும் செய்து பழகிக்கொள்ள வேண்டும். 

>யோகாசனம் செய்வதற்கு முன்னர் பிராணாயமம் செய்ய தவறிவிடக்கூடாது. இது, மிகச்சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யோகாசனம் செய்ய தெரியாதவர்களுக்கான ஆசனங்கள்! சிம்பிளாக இருக்கும் ட்ரை பண்ணுங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More