Home> Health
Advertisement

Disease X: கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான நோய் X... எச்சரிக்கும் WHO!

Disease X: நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

Disease X: கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான நோய் X... எச்சரிக்கும்  WHO!

Disease X: உலகம் முழுவதும் இப்போது நோய் X பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  விஞ்ஞானிகளும் உலக சுகாதார அமைப்பும் (WHO) இது குறித்து கவலை தெரிவித்துள்ளன. மேலும் நாடு மற்றும் உலகின் அனைத்து அரசாங்கங்களும் இதைப் பற்றி சிந்தித்து, இதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தானது என்றும் இதன் காரணமாக 5 கோடிக்கும் அதிகமானோர் இறக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், நோய் X என்றால் என்ன, இதனை கண்டு உலகம் ஏன் அஞ்சுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நோய் X என்றால் என்ன?

நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது. மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் திறன் கொண்ட 25 வைரஸ் குடும்பங்களில் ஏதேனும் ஒரு வகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வனவிலங்குகளிடையே பரவும் வைரஸ்

புது வகை  நோய்க்கு தயாராக இருப்பது முக்கியம், ஏனென்றால் வனவிலங்குகளிடையே பரவும் மிக ஆபத்தான வைரஸ், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் ஆற்றல் (Health Tips) கொண்ட ஒரு புதிய தொற்று நோயின் மூலமாக மாறக்கூடும். எனவே, எந்த நேரத்திலும் ஒரு விலங்கினால் வைரஸ் அல்லது பாக்டீரியா உற்பத்தியாகி, அது மனிதர்களுக்குப் பரவி, அவற்றை இரையாக ஆக்கத் தொடங்கும். எனவே, உலக சுகாதார நிறுவனம் (WHO) தீவிர தொற்று நோய் வகையில் இதனை சேர்த்துள்ளது. மேலும், கொரோனா வைரஸை விட நோய் X 20 மடங்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், மேலும் இது பற்றிய ஆராய்ச்சி மற்றும் அதனை தடுக்கும் வழிகளை ஆராய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நோய்க்கான தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை

வின்ஞானிகள் கணித்துள்ள இந்த சாத்தியமான அச்சுறுத்தலை "நோய் X" என்று பெயரிடபட்டுள்ளது. மேலும், இந்த நோய்க்கான சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை என்பதால், உலகம் X நோய் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே, யாரும் பீதி அடைய வேண்டாம், ஆனால் இந்த புதிய சிக்கலைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றன.

மேலும் படிக்க | முடி ரொம்ப கொட்டுதா கத்தையா வளர இந்த விதை மட்டும் போதும்

புதிய நோய்க்கான பெயர் பயன்பாடு

2018 ஆம் ஆண்டில் WHO முறையாக, புதிய நோய் தொற்றை விவரிக்கும் வகையில் நோய் X  என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியது என்று லான்செட் செய்தி வெளியிட்டுள்ளது. இது அடுத்து வர இருக்கும் தொற்று நோய்க்கான அடுத்த அறியப்படாத நோயைக் குறிக்கிறது. மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அடுத்த நோய்க்கிருமியைக் கண்டறிய நிபுணர்கள் ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம்.)

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் மேஜிக் காம்போ: இப்படி பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More