Home> Health
Advertisement

Dental Care: பல் ஆரோக்கியமாக இருக்க இதை செய்யுங்கள்; இவற்றை செய்யவேண்டாம்...

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அது உண்மை என்றாலும், பல் போனால் ஆரோக்கியம் போச்சு என்பது நிதர்சன மொழி…

Dental Care: பல் ஆரோக்கியமாக இருக்க இதை செய்யுங்கள்; இவற்றை செய்யவேண்டாம்...

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. பற்களில் சிக்கல் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைத்து விடும். பற்களை பராமரிப்பது என்பது ஒரு கலையாக இருந்தாலும், இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஆரோக்கியம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பற்களை பராமரிப்பதில் முதன்மையானது பல் துலக்குவது ஆகும். தினமும் பல் துலக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக்கூடாது என்பது தெரிந்தால் பல் பராமரிப்பு மிகவும் சுலபமானதே. 

பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை அழுத்தி தேய்ப்பது கிருமிகளைப் போக்கும் என்பது பொதுவான எண்ணம். ஆனால், அழுத்தித் தேய்ப்பது பற்களின் ஈறுகளை காயப்படுத்தக்கூடும். எனவே பற்களை அழுத்தி துலக்கக்கூடாது.

பற்களின் தன்மைக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டூத்பிரஷ்ஷை மாற்றுமாறு பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிலர் உபயோகிக்கும் பிரஷ்ஷில் உள்ள தூரிகைகள் சில நாட்களிலேயே உதிர தொடங்கிவிடும். அப்படிப்பட்ட பிரஷை உடனடியாக மாற்ற வேண்டும்.  

Also Read | எலும்புகளை பலவீனமாக்கும் ஆபத்தான ‘5’ பழக்கங்கள்

பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய பற்களை கொண்டவர்கள் பெரிய பிரஷை பயன்படுத்தும்போது ஈறுகளை சரியாக சுத்தம் செய்ய முடியாமல் போகலாம். பிரஷை அழுத்தி தேய்க்கும்போது ஈறுகளில் காயம் ஏற்படும்.

அதுமட்டுமல்ல, பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகள், உணவு துகள்கள் முழுமையாக அகலாமல் தங்கிவிடும். எனவே, நமது பற்களுக்கு ஏற்ற பிரஷ்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மென்மையான மற்றும் நெகிழ்வான பிரஷ்களை தேர்ந்தெடுப்பது பல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.  

பல் துலக்குவதற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தினமும் காலையில் இரண்டு நிமிடங்கள் பொறுமையாக பல் துலக்க வேண்டும், காலையும் மாலையும் இரு வேளை பல் துலக்குவது அவசியமானது. காலையில் தாமதமாக எழுந்திருந்தால், பல் துலக்குவதை வெறும் கடமையாக மட்டுமே நினைத்து பல் துலக்குவது பல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும்.

Read Also | இந்த இயற்கை உணவுகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்!

பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை கொண்டு அழுத்தி தேய்க்கும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி தேய்ப்பது ஈறுகளை காயப்படுத்தக்கூடும். பல் இடுக்குகளும் சுத்தமாகாது. அங்கு கிருமிகள் தங்கி, வளர்ந்துவிடும்.  அதனால் பல் வலி போன்ற பல பிரச்சினைகள் உருவாகும். பல் தேய்க்கும்போது, டூத்பிரஷை மேலும் கீழுமாக அசைத்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பல் துலக்கும்போது பற்களின் மேல் பகுதியை சுத்தம் செய்வதில் கொடுக்கப்படும் கவனத்தை, பற்களின் உட்புறத்திற்கும் கொடுக்கவேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் அதை செய்வதில்லை. அதேபோல, ஈறுகளுக்கு இடையில் உள்ள பகுதிகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. ஈறுகளில் ரத்தப்போக்கு, பல்வலி போன்ற பிரச்சினைகள் உருவாவதற்கான காரணமும் இதுதான்.

பிரஷை 45 டிகிரி கோணத்தில் வளைத்து பற்களை சுத்தப்படுத்த வேண்டும். சாப்பிட்ட பிறகு உணவு துகள்கள் பற்களில் தங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். உணவு உண்ட 15 நிமிடங்கள் கழித்துதான் பல் துலக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அது உண்மை என்றாலும், பல் போனால் ஆரோக்கியக்குறைவு அதிகமாகும் என்பது நிதர்சன மொழி…

Also Read | குளிர் கால உதடு வெடிப்பு பிரச்சனை; செலவில்லாமல் மஞ்சள் தைலம் தயாரிக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More