Home> Health
Advertisement

ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க

Weight Loss Tips: பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, எனவே அவற்றை உகொள்வது எடை குறைக்க உதவுகிறது. பழங்களில், ஆரஞ்சு எடை இழப்புக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. 

ஆரஞ்சு பழத்தில் இருக்கு உங்கள் எடை இழப்பு ரகசியம்: இப்படி சாப்பிடுங்க

உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழம் (Orange For Weight Loss) 

ஆரோக்கியமான எடையை பராமரிக்க நாம் பல வித முயற்சிகளை செய்கிறோம். அவற்றில் பழங்களை ஒட்கொள்வதும் ஒன்று. பல பழங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, எனவே அவற்றை உகொள்வது எடை குறைக்க உதவுகிறது. பழங்களில், ஆரஞ்சு எடை இழப்புக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் காணப்படும் பல சத்துக்களால் இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் இதற்கு ஆரஞ்சுகளை சரியான முறையில் உட்கொள்வது அவசியம். உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை எப்படி உட்கொள்வது என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.

எடை இழப்புக்கு ஆரஞ்சு ஏன் பயனுள்ளதாக இருக்கும்?

ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக (Low Calorie) இருப்பதால், உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த வழி. வைட்டமின்களுடன், இதில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இதன் காரணமாக அதை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவும்.

உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும் வழிகள் (How To Consume Orange To Lose Weight) 

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஷாட்ஸ்

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஷாட்கள் உடல் எடையை குறைக்க உதவும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஷாட்கள் செய்ய, மஞ்சள், இஞ்சி, ஆரஞ்சு ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதிலிருந்து தயாரிக்கப்பட்ட சாற்றை ஒரு நாளைக்கு 1 முதல் 2 முறை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும், தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உதவும். இஞ்சியை உட்கொள்வதும் உணவுப் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆரஞ்சு சாறு குடிக்கவும்

உடல் எடையை குறைக்க ஆரஞ்சு சாற்றை (Orange Juice) உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் காலை உணவு அல்லது சிற்றுண்டி நேரத்தில் இதை குடிக்கலாம். ஆரஞ்சு பழச்சாறு உட்கொள்வதன் மூலம், உங்கள் பசி கட்டுப்படுத்தப்படும் மற்றும் நீண்ட நேரம் பசியை உணராமல் இருக்கலாம். இதன் மூலம் குறைவான கலோரிகளை உட்கொண்டும் நாம் நிறைவாக உணரலாம். இதனுடன், ஆரஞ்சு உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது.

மேலும் படிக்க | Health Alert: புரத பவுடரை அதிகமா சேர்த்துகிட்டா என்னவெல்லாம் பிரச்சனை வரும்? பகீர் தகவல்!

ஆரஞ்சு ஸ்மூத்தி 

உங்களின் சிறு பசியை போக்க ஆரஞ்சு ஸ்மூத்தியை (Orange Smoothie) செய்து குடிக்கலாம். இதை காலை சாறு அல்லது மதிய சிற்றுண்டியாக குடிக்கலாம். இதற்கு பீட்ரூட், கேரட், ஆரஞ்சு, ஆப்பிள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி செய்யலாம். இதனுடன் சுவைக்காக தேனையும் சேர்க்கலாம்.

சாலட் மற்றும் பழ சாட்

ஆரஞ்சு பழத்தை ஜாம் மற்றும் பழ சாட்டாகவும் உட்கொள்ளலாம். சிற்றுண்டி நேரத்தில் இது உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆரஞ்சு பழத்தை மற்ற பழங்களுடன் கலந்து பழ சாட் செய்தும் சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிடுவதும் செரிமானத்திற்கு நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாரடைப்பு பக்கவாதத்தை தடுக்க சிம்பிள் வழி! இரத்த அடர்த்தியை பராமரிக்கும் உணவுகள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More