Home> Health
Advertisement

ஹேர் டை தேவையில்லை, கூந்தலுக்கு இந்த பொடி போதும்

முடியின் பிக்மென்டேசன் ஆழப்படுத்த காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முடியில் கறைகளை விட்டு, முடி கருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஹேர் டை தேவையில்லை, கூந்தலுக்கு இந்த பொடி போதும்

நரை முடிக்கு காபி: நமது முடி வெள்ளையாகுவது என்பது ஒரு இயற்க்கை செயலாகும். இதை நமது முதுமையின் அடையாளம் என்று கூறலாம். ஆனால் பலரின் தலைமுடி சிறு வயதிலேயே வெள்ளையாக மாற ஆரம்பித்து விடுவதால், வெள்ளை முடியைப் போக்க, தலைமுடிக்கு ஹேர் டை பூச விரும்புவார்கள். ஆனால் இப்படிச் செய்வதால் கூந்தல் பாதிப்படைவது மட்டுமின்றி, அதிகப் பணமும் செலவாகும். அந்த வகையில் உங்களின் இந்த வேலையை வெறும் 10 ரூபாய் காபி துளில் கூட நீங்கள் எளிதாக செய்யலாம். உங்கள் தலைமுடியை கருப்பாக மாற்றவும், நரைத்த முடியை மறைக்கவும் நீங்கள் விரும்பினால், வழக்கமான கூந்தல் பராமரிப்பில் காபி துளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

காபி தூள் முடியை கருப்பாக்க உதவுகிறது
காபி தூள் முடியின் நிறமியை ஆழமாக்கி, கறைகளை அகற்றும். இதன் காரணமாக முடி கருமையாக தெரியும். அதுமட்டுமின்றி, இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அத்துடன் இது ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்கிறது, இது முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது முடியை கருப்பாக்க உதவுகிறது.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை 

இந்த வழியில் பயன்படுத்துங்கள்
நீங்கள் முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துகிக்கொண்டு அதை கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு, அதில் 2 முதல் 3 தேக்கரண்டி காபி தூள் சேர்க்கவும். இப்போது சிறிய ஃபிளேமில் சிறிது நேரம் கொதிக்க விடவும். இந்த நீர் பாதியாக மாறியதும், கேஸ்ஸை அணைக்கவும். இப்போது இந்த கலவை சிறுது ஆரியப் பிறகு உங்களின் முடியைத் திறந்து, காட்டனின் உதவியுடன், முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவவும். பின்னர் முடியை கட்டி 1 மணி நேரம் உலர வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியைக் கழுவவும். நீங்கள் விரும்பினால், காபி தூள் மற்றும் மருதாணியை பேஸ்ட் செய்து, ஹேர் பேக் போல கூந்தலில் தடவலாம். எனவே இந்த செயல்முறை மூலம் உங்கள் முடி நிறம் இயற்கையாகவே கருமையாகவும் அழகாகவும் மாற்றலாம்.

காபி தூள் ஹேர் மாஸ்க்குகளின் நன்மைகள் 

* முடி வளர்ச்சிக்கு உதவும்
* முடி மேலாண்மை செய்ய சிறந்த வழி
* உச்சந்தலையை எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது
* இயற்கை முடி நிறத்தை மேம்படுத்துகிறது

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More