Home> Health
Advertisement

தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்

கிராம்பு உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். தினமும் இரவில் கிராம்புகளை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படும்  

தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்

கிராம்பு உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இதனை இரவில் சாப்பிட்டால் அது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படும். இதுதவிர இன்னும் சில நன்மைகளும் இருகின்றன. 

கிராம்புகளை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வீக்கம் போய்விடும்

கிராம்பு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வீக்கம் அல்லது வலி உள்ளவர்கள் தாராளமாக கிராம்புகளை உட்கொள்ளலாம். பல்வலி அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் வலி உள்ளவர்களும் இரவில் கிராம்புகளை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Health Alert: இவற்றை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது, ஜாக்கிரதை!!

பசி ஆசையை போக்கும்

சிலருக்கு இரவில் சாப்பிட ஆசை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கிராம்பு மூலம் பசியை போக்கலாம். இதனை பாலில் சேர்த்தும் குடிக்கலாம் அல்லது நேரடியாகவும் சாப்பிடலாம். இப்படி உட்கொள்ளும்போது இரவில் உணவின் மீது ஆசை இருக்காது.

இருமலுக்கு நிவாரணம்

கிராம்பை வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வர சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் குணமாகும். அதே நேரத்தில், கிராம்பு மற்றும் தேன் கலவையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. அதனால் இந்த கலவை உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.

கிராம்புகளை இவ்வாறு பயன்படுத்தவும்

* கிராம்பு பொடியை காய்கறிகள், ரொட்டி, சாலட் ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம்.
* கிராம்பு பொடியை பாலில் கலந்து சாப்பிடலாம்.
* நீங்கள் கிராம்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | தினமும் காலையில் வெறுவயிற்றில் சுக்கு காஃபி குடிக்கலாமா? இதெல்லாம் நடக்கும்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More