Home> Health
Advertisement

கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க!

உங்கள் உடலின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் ஆரம்பத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்றாலும் பின்னாளில் இது உங்களுக்கு மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.  

கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளுக்கு 'நோ'  சொல்லுங்க!

இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதற்கு முக்கியமான காரணமாக நமது உணவு முறையும் இருக்கிறது.  நாம் சாப்பிடக்கூடிய உணவுக்கும் பல நோய்களுக்கும் நேரடியாக தொடர்புள்ளது என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.  உணவுடன் தொடர்புடைய ஒரு நோயாக கொலஸ்ட்ரால் கருதப்படுகிறது, நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலம் நமது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  பெரும்பாலான மக்கள் இந்த நிலையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை ஆனால் இது மிகவும் ஆபத்தான நிலை என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.  உங்கள் உடலின் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் ஆரம்பத்தில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்றாலும் பின்னாளில் இது உங்களுக்கு மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை கூட ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.

உடலில் முக்கியமாக 2 வகையான கொலஸ்ட்ரால் உள்ளது, அதில் ஒன்று எல்டிஎல் கொழுப்பு (கேட்ட கொலஸ்ட்ரால்) மற்றொன்று ஹெச்டிஎல் கொழுப்பு (நல்ல கொலஸ்ட்ரால்) ஆகும்.  கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்த வேண்டியது அவசியம், ஏனெனில் இது இதய நோயுடன் தொடர்புடையது.  எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பதையும், கொலஸ்டராலிலிருந்து உங்களால் உடலை பாதுகாக்க நீங்கள் எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க | மதுபிரியர்களுக்கான டிப்ஸ்! அதிக போதையால் ஹேங்கோவர் ஆனால் என்ன செய்வது?

1) வெண்ணெய்:

தினமும் வெண்ணெய் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை வேகமாக அதிகரிக்கிறது.  வெண்ணெய் நரம்புகளை அடைந்த பிறகு உறைந்து விடுவதால், இது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. 

2) ஐஸ்கிரீம்:

ஐஸ்கிரீம் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கலாம் ஆனால் அதில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  100 கிராம் வெண்ணிலா ஐஸ்கிரீமில் 41 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, எனவே இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

3) பிஸ்கட்:

பொதுவாக பலரும் தேநீருடன் பிஸ்கட்களை சேர்த்து சாப்பிடுவதை விரும்புகின்றனர், ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.  ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, பிஸ்கட்கள் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

4) எண்ணெய் அதிகமுள்ள பொருட்கள்;

சமோசா, பக்கோடா அல்லது வறுத்த கோழி போன்ற எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகளில் அதிகளவு கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது, இதனை சாப்பிட்டால் விரைவில் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகாரித்துவிடும்.  இது உங்களில் நரம்புகளில் சேர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும்.

5)  துரித உணவுகள்:

இன்றைய தலைமுறையினரிடம் பர்கர்கள், பீட்சா அல்லது பாஸ்தா போன்ற துரித உணவுகளுக்கு மவுசு அதிகமுள்ளது.  இந்த ஆரோக்கியமற்ற உணவு முறை உங்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  வெண்ணெய், சீஸ் மற்றும் கிரீம் போன்ற செயற்கை பொருட்களை வைத்து இந்த வகையான உணவுகளை தயாரிக்க வேண்டும்.  இது கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் இதனை சாப்பிடாமல் தவிர்த்துவிடுங்கள்.

மேலும் படிக்க | தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More