Home> Health
Advertisement

சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி ரெடி! கொசு ரங்குஸ்கிக்கு வில்லன் Ixchiq ரெடி!

Chikungunya Vaccine: சிக்குன்குனியாவை உண்டாக்கும் வைரஸின் பாதிப்பில் இருந்து பாதுக்காக்க, தடுப்பூசி வந்தாச்சு...

சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி ரெடி! கொசு ரங்குஸ்கிக்கு வில்லன் Ixchiq ரெடி!

சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொசுக்களால் பரவும் வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பயன்படுத்தலாம் என புதியிஅ தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் தந்துள்ளது. சிக்குன்குனியா (Chikungunya) என்பது கொசுக்கள் மூலம் மனிதனுக்குப் பரவும் தொற்றுகளால் உருவாகும்  நோய் ஆகும். இந்த நோய்க்குக் காரணமான ஆல்ஃபா வகை வைரஸ் Aedes egypti வகை கொசுக்கள் மூலம் பரவுகின்றன. 

சிக்குன்குனியாவை உண்டாக்கும் வைரஸில் இருந்து பாதுக்காக்க Ixchiq தடுப்பூசி, ஊசி பயன்படும். சிக்குன்குனியாவை உண்டாக்கும் வைரஸின் பாதிப்பில் இருந்து பாதுக்காக்க, Ixchiq தடுப்பூசி தசையில் ஊசியாக போடப்படும். இந்தத் தடுப்பூசியை, வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் அறிகுறிகளைப் போன்ற அறிகுறிகளை பெறுபவருக்கும் பயன்படுத்தலாம்.

"சிக்குன்குனியா வைரஸ் தொற்று கடுமையான நோய் மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், அதிலும் வயதானவர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட தனிநபர்களுக்கு பிரச்சனையாக இருந்து வந்தது சிக்குன்குனியா. 

மேலும் படிக்க | டேஸ்டா இருந்தாலும் டேஞ்சராகும் பச்சை பட்டாணி! சிறுநீரக கல், மூட்டு வலிக்கு காரணமாகும் காய்

இந்த மருந்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், தடுப்பூசி போடப்பட்ட 266 பங்கேற்பாளர்களுக்கு உருவாகிய ஆன்டிபாடியின் அளவு, தடுப்பூசி போடப்பட்டவர்களிடமிருந்து இரத்தத்தைப் பெற்ற மனிதரல்லாத விலங்குகளில் பாதுகாப்பதாகக் காட்டப்பட்ட அளவை அடிப்படையாகக் கொண்டது. இந்த நபர்களின் நோயெதிர்ப்பு சக்தியை 96 பங்கேற்பாளர்கள் மருந்துப்போலி பெறுபவர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது.

வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரண்டு மருத்துவ ஆய்வுகள், Ixchiq தடுப்பூசியின் பாதுகாப்பு மதிப்பீட்டை உறுதி செய்தன. இந்த ஆய்வுகளில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 3,500 பங்கேற்பாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். 

தடுப்பூசியின் பக்க விளைவுகள்
தலைவலி, சோர்வு, தசைவலி, மூட்டு வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் ஊசி போடும் இடத்தில் லேசான வீக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். 

மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ

கொசுக்கள் மூலம் மனிதனுக்குப் பரவும் தொற்றுகளால் உருவாகும் நோய் என்றால் சிக்குன்குனியா. சிக்குன்குனியா வந்துவிட்டால் குறைந்தது 3 நாட்கள் பாதிப்பு இருக்கும். 

சிக்குன்குனியா தொற்று ஏற்பட்டிருந்தால் காய்ச்சல், மூட்டு வலிகள், கை, கால்கள் வீக்கம், அரிப்பு, சோர்வு, வாய்க் குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு, இதயப் பிரச்னை என தீவிரமான நோய் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.  

சிக்குன்குனியா எத்தனை நாட்களுக்கு இருக்கும்?
தொற்று 2 முதல் 12 நாட்கள் வரை நீடிக்கும்.   கொசுக்களால் பரவும் வைரஸ் நோயானா சிக்குன்குனியா டெங்கு காய்ச்சலைப் போன்றது. ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய கொசுக்கள், சிக்குன்குனியா நோய் பாதிப்பு இருக்கும் ஒருவரை கடிக்கும் போது, பெறும் பாதிப்பை, வேறொருவரை கடிக்கும்போது பரப்புகின்றன.  சிக்கன்குனியாவை பரப்பும் வைரஸ், சட்டென்று கொசுவின் அமைப்பில் பரவி அதன் உமிழ்நீர் சுரப்பிகளை அடையும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More