Home> Health
Advertisement

கார் சத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

காரின் சத்தத்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

கார் சத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான மக்கள் கார் சத்தம் எரிச்சலூட்டுவதாக நினைக்கின்றனர். ஹார்ன் சத்தமாக இருந்தாலும், பிரேக்குகள் சத்தமாக இருந்தாலும், இன்ஜின் சத்தமாக இருந்தாலும், கார் சத்தம் தொல்லை தான். இது குறிப்பாக நெரிசலான நகரங்களில் அல்லது நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் தினந்தோறும் இந்த எரிச்சலை எதிர்கொள்கின்றனர். இது குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்த சத்தங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றன. 

மேலும் படிக்க | ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 3 கார்கள்

அமெரிக்காவில் இருக்கும் ரட்ஜெர்ஸின் ராபர்ட் வுட் ஜான்சன் மருத்துவப் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கார் இரைச்சல் மற்றும் இதயம் - இருதய நோய்களுக்கு இடையேயான தொடர்பைப் பற்றிய ஒரு ஆய்வை வெளியிட்டனர். அதில் கார் இரைச்சல்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறியுள்ளனர். 

2018 ஆம் ஆண்டில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 16,000 நியூ ஜெர்சி குடியிருப்பாளர்களின் தரவுகளை அவர்கள் ஆராய்ந்தனர். அதில், போக்குவரத்து சத்தம் அதிகம் உள்ள பகுதிகளில் மாரடைப்பு விகிதம் 72% அதிகமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள ஆய்வாள்கள், போக்குவரத்து இரைச்சல் கார் மற்றும் விமான போக்குவரத்து இரண்டையும் உள்ளடக்கியது எனக் கூறியுள்ளனர். நியூஜெர்சியில் ஏற்படும் மாரடைப்பில் 20 பேரில் ஒருவருக்கு இரைச்சல் தான் காரணம் என்றும் தெரிவித்தனர். 

சத்தமில்லாத  பகுதியில் வசிக்கும் மக்களிடத்தில் ஏற்படும் மாரடைப்பு மற்றும் சத்தம் அதிகம் உள்ள பகுதிகளில் ஏற்படும் மாரடைப்பு என இரண்டு பகுதிகளையும் ஆய்வாளர்கள் ஒப்பிட்டனர். சத்தம் அதிகம் உள்ள பகுதியில் ஒரு லட்சம் பேரில் 3,336 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவிதுள்ள ஆய்வாளர்கள், சத்தம் குறைவாக இருக்கும் பகுதியில் 1,938 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக கூறியுள்ளனர். டிராபிக் சத்தம் மற்றும் வாகன இரைச்சல் தொடர்பாக ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வும், நியூ ஜெர்சியில் நடத்தப்பட்ட ஆய்வும் ஒத்துபோகின்றன.  ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஏபெல் மோரேரா பேசும்போது, தண்ணீர் மற்றும் காற்று மாசுபாடுகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றன, மற்ற மாசுகள் குறித்து பொதுவாக கவனம் செலுத்தப்படுவதில்லை எனக் கூறினார். 

மேலும் படிக்க | எலக்டிரிக் கார் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான 4 முக்கியமான டிப்ஸ் 

மாரடைப்பு, ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு மக்கள் பழகிவிட்டதாக தெரிவித்த அவர், ஒலி மற்றும் இரைச்சல் காரணமாக ஏற்படும் ஆபத்துபகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார். ஒலி காப்பு கருவிகள் மற்றும் மின்சார வாகனங்களை இயக்குவதன் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என்றும் ஏபெல் தெரிவித்துள்ளார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More