Home> Health
Advertisement

பானி பூரி பிரியர்களுக்கு ஆப்பு! கேன்சர் வருமாம்..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

Cancer Agents In Pani Puri : வட இந்தியாவில் இருந்து வந்து, இந்தியா முழுவதும் வேகமாக பரவிய சாட் உணவு ஒன்று பானிபூரி. இதை சாப்பிடுவதால் கேன்சர் வரும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது.   

பானி பூரி பிரியர்களுக்கு ஆப்பு! கேன்சர் வருமாம்..அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

Cancer Agents In Pani Puri : கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட சாட் உணவுகளுள் ஒன்று பானிபூரி. வட இந்தியாவில் அதிகமாக விற்கப்பட்ட இந்த சாட் வகை உணவு, பின்னாளில் பொறுமையாக வெளி மாநிலங்களுக்கும் பரவி தமிழ் நாட்டிலும் அதிகாக விற்கப்படும் திண்பண்டங்களுள் ஒன்றாக மாறி விட்டது. இப்பாேது சென்னை மட்டுமன்றி, தமிழக கிராமங்களில் கூட பானி பூரி கடையை பார்க்க முடிகிறது. தெருவிற்கு தெரு தள்ளு வண்டி கடைகளிலும், ரோட்டு கடைகளிலும் விற்கப்படும் இந்த பானிபூரியை சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் எனக்கூறப்படுகிறது. 

பானிபூரியால் ஆபத்து:

சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகத்தில் ரோட்டோர கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அங்கு பானிபூரி விற்கும் அனைத்து கடைகளிலும், ஹோட்டல்களிலும் பானி பூரிகளை கலெக்ட் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைனடத்தினர். அதில்தான் பானிபூரியில் கேன்சர் விளைவிக்கும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

பானிபூரியை பொறுத்தவரை பல வகைகள் இருக்கின்றன. கர்நாடகாவில் இப்படி விதவிதமான பானிபூரி ஃபேளேவர்கள் விற்கப்படுகின்றன. அதில் குறிப்பாக கோபி மன்சூரியன் மற்றும் கெபாப் ஆகிய வகைகளில்தான் கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் கண்டறியப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிரில்லியண்ட் ப்ளூ, டார்ட்ராசைன் மற்றும் சன்செட் யெல்லோ ஆகியவைதான் அந்த நிறமிகள் ஆகும். இவற்றின் மூலம் கேன்சர் உண்டாக வாய்ப்புள்ளதாம். 

தமிழகத்திலும் பகீர்!

தமிழகத்திலும் பானி பூரிக்கள் அதிகமாக விற்கப்படுவதால், இங்கும் இதன் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது. பானி பூரியில் கலக்கப்படும் தண்ணீரில் பச்சை நிற பவுடர் ஒன்று கலக்கப்படுவதாகவும் இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா என ஆராய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கின்றனர். 

இதையடுத்து, சென்னையில் பானி பூரி கடைகளில் சோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. மெரினா கடற்கரையில் இருக்கும் பானி பூரி கடைகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைனடத்தினர். 

செயற்கை நிறம் பயன்படுத்தப்படுவது ஏன்?

பானிபூரி பிரியர்களையும் சாதாரண மக்களையும் கவர, இது போல செயற்கை நிற ஊட்டிகள் மற்றும் சுவையூட்டிகளை பானி பூரி கடைக்காரர்கள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது போல, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செய்றகை உணவு பொருட்களையும் நிற ஊட்டிகளையும் கலக்குவதற்கு பதிலாக இயற்கையான முறையில் நிற ஊட்டிகளை தயாரிக்கலாம் என்பது சுகாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறாது. பீட்ரூட், மஞ்சள் மற்றும் குங்கும பூவால் உருவாகும் நிற ஊட்டிகளை பயன்படுத்தலாம் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More