Home> Health
Advertisement

பல நோய்களை விரட்டும் ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி குளிர்கால பயிர் பல நோய்களை விரட்டு தன்மையுடையது. இது முட்டைக்கோஸ் வகையை சேர்ந்தது ஆகும்.

பல நோய்களை விரட்டும் ப்ரோக்கோலி

இந்தியாவில் பலரும் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறியாக பிரக்கோலி இருக்கிறது. இந்த பிரக்கோலி மத்திய தரைக்கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளில் விளைபவை. பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிகம் பயன்படுத்தினர். தற்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் ப்ரோக்கோலியை அதிகம் விரும்பி உண்கின்றனர். முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. பல நோய்களையும் அவை விரட்டுகின்றன.

இதயத்திற்கு பயன்:

உலகில் இன்று பலரையும் வயது வேறுபாடின்றி தாக்கக்கூடிய நோயாக இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கின்றன. அதிலும் இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக மரணத்தில் வீழ்வது அதிகரித்துள்ளது. இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் நலன் பயக்கிறது.

புற்று நோய் தடுப்பு: 

ப்ரோக்கோலி புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. மேலும் நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் ப்ரோக்கோலி சிறப்பாக செயல்படுகிறது. 

fallbacks

தைராய்டுக்கு தடை:

ப்ரோக்கோலி  தைராய்டுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதினால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும். 

கண்பார்வை:

நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்புகள் கண்கள். முதுமையை நெருங்கும் பெரும்பாலான மனிதர்கள் அனைவருக்குமே கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

மேலும் படிக்க | தாய் பாலின் சத்துக்கள் நிறைந்திருக்கும் ‘இதயத்திற்கு’ இதமான தேங்காய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More