Home> Health
Advertisement

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..!!

உணவு பழக்கத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில தவறான உணவு பழக்கங்களை அறிந்து கொள்ளலாம். 

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..!!

புதுடெல்லி: குளிர்காலத்தில் நோய்கள் வராமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பது மிகவும் அவசியம். இதன் மூலம், காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட, முதலில் நீங்கள் காலை உணவில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். சில சமயங்களில் உங்கள் காலை உணவு பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், எனவே,  காலை உணவில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஆரஞ்சு சாறு 

கூடுதல் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் காலை உணவில் ஆரஞ்சு சாறு குடிக்க வேண்டாம் என்பது தவறான முடிவு. ஆரஞ்சு சாறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. எனவே காலை உணவில் கட்டாயம் ஆரஞ்சு ஜூஸ் இருக்க வேண்டும்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

சர்க்கரை உள்ள உணவு பொருட்கள்

காலை உணவில் சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். பேஸ்ட்ரிகள் அல்லது பான்கேக்குகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள பொருட்களை உண்பது உங்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. அதே நேரத்தில், அதிக சர்க்கரை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது.

அதிக சோடியம் உள்ள உணவு

காலை உணவில் துரித உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். இது நோயெதிர்ப்பு மண்டலத்தில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதில் அதிக உப்பு இருக்கும். அதிக சோடியம் உணவு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!

புரத உணவுகள்

காலை உணவில் புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு புரதம் மிகவும் முக்கியமானது. பல நேரங்களில் நாம் காலை உணவாக பிரெஞ்ச் டோஸ்ட் அல்லது பேஸ்ட்ரி போன்றவற்றை சாப்பிடுகிறோம். இது போன்ற உணவு பொருட்களில் கார்போஹைட்ரேட்டின் அளவு மிக அதிகமாக உள்ளது. ஆனால் புரதம் குறைந்த அளவில் உள்ளது. காலை உணவில் முட்டை, பால் மற்றும் டோஃபு போன்றவற்றை உண்ணுங்கள். அவற்றில் புரதம் நிறைந்துள்ளது.

வைட்டமின் டி 

உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி மீன் உணவு, ஓட்ஸ், முட்டை, பால் மற்றும் சில வகையான சாறுகளில் காணப்படுகிறது. காலை உணவில் இந்த விஷயங்களைச் சேர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இது எந்த ஒரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது அல்ல. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More