Home> Health
Advertisement

ரெடிமேட் இட்லி மாவினால் உண்டாகும் தீமைகள்

கடைகளில் வாங்கும் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு தீமையளிக்கும்.

ரெடிமேட் இட்லி மாவினால் உண்டாகும் தீமைகள்

காலை உணவுக்கு சிறந்த மற்றும் ஆரோக்கிய உணவு இட்லி ஆகும். இதில் எண்ணெய் சேர்ப்பது இல்லை மற்றும் இது நீராவி மூலம் சமைக்கப்படுவதால் இது மிகவும் ஆரோக்கிய உணவாகும்.  இதனால் செரிமான கோளாறோ, கொலஸ்ட்ரால் பிரச்சனையோ ஏற்படாது. 

தற்போது நாம் நேரமின்மை காரணமாக இட்லி (IDLI), தோசை (Dosa) மாவுகளை கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்துகிறோம். இப்படி வாங்கும் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு தீமையளிப்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்துகிறோம். முன்பெல்லாம் நாம் ஆட்டுக்கல்லில் தான் மாவு அரைத்து சாப்பிட்டு வந்தோம். கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக இருந்தது. அந்தவகையில் கடைகளில் மாவு விற்க ஆட்டுவதற்கான அவர்கள் பயன்படுத்தும் பெரிய பெரிய கிரைண்டர்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

ALSO READ | ‘Idlis are boring’ என்று கூறிய பிரிட்டிஷ் பேராசிரியருக்கு Twitter-ல் பாடம் புகட்டிய பாரதப் புதல்வர்கள்

மாவு ஆட்டுகின்ற போது, அதன்பிறகு, கிரைண்டரைக் கழுவுகின்ற பொழுது, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும். இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ஈகோலி என்னும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட, முழுமையாக அழிவதில்லை. கடைகளில் நாம் வாங்குகின்ற மாவினால் தான் இந்த பிரச்னைகள் என்றால், பாக்கெட்டில் அடைக்கப்படுகின்ற, இன்ஸ்டன்ட் மாவிலும் இதைவிட அதிக பிரச்னைகள் இருக்கிறது. 

இன்ஸ்டன்ட் இட்லி மாவு மிக வேகமாக கெட்டுப் போய்விடக்கூடாது என்பதற்கானவே கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் உங்களுக்கு அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகும். எனவே நீங்கள் பாக்கெட்டில் வாங்கும் அனைத்துமே உடல் நலத்திற்கு கேடு தான் விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More