Home> Health
Advertisement

ஓவரா முடி கொட்டுதா? அப்போ இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

Hair Fall Tips: முடி உதிர்தல் மிகவும் கஷ்டத்தை தரும், ஆனால் இன்று நாம் ஒரு தீர்வைக் காணப் போகிறோம், அதை செய்து வந்தால், முடி உதிர்வை பெருமளவு குறைக்கலாம்.  

ஓவரா முடி கொட்டுதா? அப்போ இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

Hair Fall Tips: முடி உதிர்வு என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது, இது இளைஞர்களையும் கவலையடையச் செய்கிறது. இளம் வயதில் முடி கொட்டுவது மிகவும் மோசமான அனுபவம். மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவை முக்கிய காரணமாக இருக்கலாம். சிலர் முடி உதிர்வதை நிறுத்த பல மூலிகை எண்ணெய் தடவுகிறார்கள், சிலர் மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் நீங்கள் எப்போதாவது உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய முயற்சித்தீர்களா? ஆம் சில வாழ்க்கை முறையில் செய்யப்படும்  மாற்றங்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும். அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

முடி உதிர்வை தடுக்க பயனுள்ள வைத்தியம் | Effective Remedies To Stop Hair Loss:

1. உணவில் மாற்றம் அவசியம்
முடி உதிர்வைத் தடுக்க, முதலில் உங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அந்தவகையில் நீங்கள் உண்ணும் உணவில் போதுமான அளவு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும். குறிப்பாக,

- புரதம்: முடி முக்கியமாக கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. எனவே, முட்டை, மீன், கோழிக்கறி, பருப்பு வகைகள், சோயாபீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- வைட்டமின் ஏ மற்றும் சி: இந்த வைட்டமின்கள் முடியின் வேர்களுக்கு வலிமையை அளிக்க உதவுகிறது. இதற்கு நீங்கள் கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடுங்கள்.
- இரும்பு மற்றும் துத்தநாகம்: இந்த தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு அவசியமானது. உங்கள் உணவில் கீரை, பூசணி விதைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்! 

2. யோகா மற்றும் தியானம்
முடி உதிர்வதற்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணம். யோகா மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தை குறைத்து, கூந்தல் வளர்ச்சியை அதிக்கலாம். தினமும் 15-20 நிமிடங்கள் சிரசாசனம், வஜ்ராசனம் மற்றும் சர்வாங்காசனம் போன்ற தியானம் மற்றும் யோகா ஆசனங்களை செய்யுங்கள்.

3. மூலிகை வைத்தியம்
சில இயற்கை மூலிகைகள் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. இதோ சில மூலிகை வைத்தியங்கள்:

- நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது முடியை பலப்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவவும்.
- பிரிங்ராஜ்: பிரிங்ராஜ் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்கும்.
- வெந்தயம்: வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பேஸ்ட் செய்து தலையில் தடவவும். பின்னர் 30 நிமிடம் கழித்து கழுவவும்.

4. மசாஜ்
தலை மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது முடி வேர்களை பலப்படுத்துகிறது. வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்யவும்.

5. இரசாயன பொருட்களை தவிர்க்கவும்
கூந்தலில் அதிக ரசாயனங்கள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்துவதால் முடி வலுவிழந்துவிடும். இயற்கை மற்றும் மூலிகை ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More