Home> Health
Advertisement

சாப்பிட்டபிறகு வெல்லம் சாப்பிட வேண்டும்..! ஏன் தெரியுமா?

வெல்லம் செரிமானத்திற்கு மிகவும் உதவும். உணவிற்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.  

சாப்பிட்டபிறகு வெல்லம் சாப்பிட வேண்டும்..! ஏன் தெரியுமா?

முன்னோர்கள் பழக்கம்

முன்னோர்களின் வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பதால், அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ளுமாம். வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. எனவே, சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. அப்படி உணவுக்கு பின் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Beetroot Parotta: குழந்தைகளை ஹெல்தியா சாப்பிட வைக்கனுமா? இந்த பீட்ரூட் பரோட்டாவை ட்ரை பண்ணுங்க!

உணவுக்குப் பின் சாப்பிடுவது ஏன்?

உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல வகையான சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளை வலுப்படுத்த வேலை செய்கிறது. வெல்லம் செரிமானத்திற்கு மிகவும் உதவும். உணவிற்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. அத்துடன், உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் ஒரு மருந்து. வெல்லம் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை ஏற்படாது. இரத்த சோகை நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக வெல்லம் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | எலும்பை பலவீனப்படுத்தும் இந்த உணவுகளை தொடவே தொடதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More