Home> Health
Advertisement

3 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும்

இந்தியாவில் தொப்பையை குறைக்க விரும்பும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர், ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்கள் விரும்பிய பலனைப் பெறவதில்லை.

3 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும்

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை. குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், பிஸியான வாழ்க்கை முறையாலும் பலரது தொப்பையை குறைக்கும் ஆசை நிறைவேறுவதில்லை. இன்று நாம் உடல் எடையை குறைக்க சில குறிப்புகளை காண உள்ளோம். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

இந்த குறிப்புகளை பின்பற்றினால் 3 மாதங்களில் தொப்பை குறையும்

1. உணவில் கலோரிகளைக் குறைக்கவும்
தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான முதல் நிபந்தனை உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். இதற்காக குறைந்த கலோரி உணவுகளை உண்ணத் தொடங்குங்கள். காலை உணவில் ஓட்ஸ், மதிய உணவில் பருப்பு ரொட்டி, இரவு உணவில் லேசான உணவு.

மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!

2. உடற்பயிற்சி
உங்களுக்காக நீங்கள் சில உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுங்கள், இது உங்கள் தொப்பை குறைப்புக்கு நல்ல ரிசல்ட் தரும். இதற்காக, உங்கள் தினசரி வழக்கத்தில் ஜிம்மிங் அல்லது ஏதேனும் விளையாட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

fallbacks

3. பத்தாயிரம் அடிகள் நடக்கவும்
தொப்பையை குறைக்க, நீங்கள் இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது தினமும் சுமார் 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். இது மிகவும் எளிதான உடற்பயிற்சி மற்றும் இதை செய்வதால் ஒரு நாளைக்கு 400 முதல் 500 கலோரிகளை இழக்க உதவும்.

தொப்பை கொழுப்பை குறைக்க மற்ற சில வழிகள்
* காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடித்தால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
* சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்தால், அதிக உணவு உண்ணும் ஆசை குறையும்.
* இனிப்பு பொருட்களை உட்கொள்வதைக் குறைக்கவும்.
* மெதுவாக உட்கார்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்துங்கள், அது உணவை ஜீரணிக்கும்.
* அதிக எண்ணெய் பொருட்கள், பர்கர்கள், பீட்சா, சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* உங்கள் பிளாட் 4-5 மாடிகளில் இருந்தால், லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More