Home> Health
Advertisement

Omicron Diet: ஒமிக்ரான் பாதிப்பா? இந்த உணவுகளை சாப்பிடுங்க! ஆயுர்வேத பரிந்துரை

இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள், ஒமிக்ரானின் பாதிப்புக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இவை என ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரைக்கும் ஆரோக்கிய உணவுப்பொருட்கள் இவை...  

Omicron Diet: ஒமிக்ரான் பாதிப்பா? இந்த உணவுகளை சாப்பிடுங்க! ஆயுர்வேத பரிந்துரை

இந்தியாவில் ஓமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வருகின்றன மற்றும் ஆபத்தை குறைப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும். உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய உணவுகளின் பரிந்துரை இது.  சில நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், ஒமிக்ரான் மாறுபாடு (Omicron Varient) புதிதாக உருவாகி அச்சுறுத்துகிறது. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க, சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை தேவை. 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் சில நல்ல உத்திகளை ஆயுர்வேதம் தருகிறது. ஆயுர்வேத நிபுணர் டாக்டர் சஞ்சல் ஷர்மா, ஓமிக்ரானை எதிர்த்துப் போராட உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளைப் பரிந்துரை செய்துள்ளார்.

ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!

இஞ்சி
தினசரி நாம் பயன்படுத்தும் உணவுப்பொருள் இஞ்சி, நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity Boosters) அதிகரிக்கும் மற்றும் வைரஸ்களின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கிறது.

மஞ்சள்
வைரஸ் தடுப்புக்கான சிறந்த மருந்தாக மஞ்சள் கருதப்படுகிறது.

நெல்லிக்காய்
ஆயுர்வேதத்தில், நெல்லிக்காய் அமிர்தம் என்று கூறப்படுகிறது. நெல்லிக்காயை பல வடிவங்களில் நாம் பயன்படுத்துகிறோம். வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்காய் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

கிவி
ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பிற வைட்டமின்கள் ஒன்றாகக் காணப்படும் மல்டிவைட்டமின் சூப்பர்ஃபுட்களில் ஒன்று கிவி.

பூண்டு
உணவின் சுவையை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் (Health Information) அடித்தளம் அமைக்கிறது பூண்டு. அதோடு, தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

ALSO READ | சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும் பழம் 

பேரீச்சம்பழம் 
பேரீச்சம்பழம் சத்தான உணவுப் பொருளாகும். இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், இரும்பு மற்றும் மக்னீசியம் ஆகியவை போதுமான அளவில் காணப்படுகின்றன. தினமும் காலையில் இளஞ்சூடான பாலுடன் பேரிட்சையை சாப்பிடலாம்.

fallbacks

வெல்லம்
வெல்லம் உட்கொள்வது செரிமானத்திற்கு நன்மை பயக்கும். அதில் உள்ள இரும்பு தாது, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.  

பசு நெய்

பசு நெய்யை உண்பதை எப்போதுமே ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. செரிமான அமைப்பை வலுப்படுத்தும் நெய், உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய், தொற்றுநோய்களில் இருந்து பாதுக்காக்க உதவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More