Home> Health
Advertisement

இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!

Fruits For Belly Fat : பலருக்கு, வயிற்று தொப்பையை குறைப்பது என்பது மிகவும் கடுமையான விஷயமாக இருக்கலாம். அதை எளிமையாக்க, சில பழங்களை சாப்பிடலாம். அவை என்னென்ன பழங்கள் தெரியுமா?   

இடை சிறுத்து சிக்கென மாற வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!

Fruits For Belly Fat : உடல் எடை அதிகரித்து இருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகளும், பாதிப்புகளும் வரும் என்பது சொல்லித்தெரிய தேவையில்லை. இருதய கோளாறுகள், நீரிழிவு நோய், என பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதாக ஒரு மருத்துவ அறிக்கை கூறுகிறது. உடல் பருமனுடன் இருப்பவர்களுக்கு தேவயில்லாத போனஸாக வரும் விஷயங்களுள் ஒன்று, பெரிய தொப்பை. இது, உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கும் கூட வரலாம். இதற்கு காரணங்களும் பல இருக்கின்றன.

நீங்கள் உங்கள் வயிற்று தொப்பையை குறைக்க வேண்டும் என்று நெடுநாட்களாக யோசித்து கொண்டிருக்கிறீர்களா? பலர், தங்கள் இடை சிறுத்து சிக்கென இருக்க வேண்டும் என நினைப்பர். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான் அவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இப்படி, வெயிட் லாஸ் பயணத்தில் இருப்பவர்களுக்கென சில ஆரோக்கியமான பழங்கள் இருக்கின்றன. இந்த பழங்கள், வயிறு உப்பசமாவதை தடுப்பதற்கும், கலோரிகளை குறைப்பதற்கும் உதவுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலர் இவற்றை தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை என்னென்ன என்பதை இங்பு பார்ப்பாேம். 

ஆப்பிள்:

ஆங்கிலத்தில் “An Apple a day keeps the doctor away” என்று கூறுவர். இது, உங்களுக்கு தொப்பை தசையை குறைக்கவும் கூட உதவுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆப்பிள் பழங்களில் அதிகளவில் ஃபைபர் சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இதில் இருக்கு பெக்டின் என்ற சத்து, சாப்பிட்ட பின்பு முழுமையான உணர்வை ஏற்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதில் இருந்து நம்மை தடுக்கிறது. இது, மெதுவாக செரிமானம் ஆவதால் நெடுநேரத்திற்கு பசி உணர்வும் ஏற்படாமல் தடுக்குமாம். 

மேலும் படிக்க | பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில், இயற்கையான இனிப்பு சத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது, எடையை குறைக்க பயன்படும் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்து இருக்கின்றன. உடலை சிக்கென வைத்துக்கொள்ள உதவும் பழங்களுள், இதுவும் ஒன்று. செரிமானத்த உண்டு பண்ணும் கார்போஹைட்ரேட் சத்துகள் இதில் இருப்பதாலும், சாப்பிட்ட பின்பு வயிறு நிரம்பிய உணர்வை இது தருவதாலும் பலர் தங்கள் வெயிட் லாஸ் டயட்டில் இதை சேர்த்துக்கொள்கின்றனர். ஜிம்மிற்கு செல்பவர்கள், காலையில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்தால் ஆற்றலுடன் உணர்வதாக கூறுகின்றனர். 

fallbacks

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழங்களில் கலோரி சத்துகள் குறைவாகவும் புரத சத்துகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பழம் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வைட்டமின் சி சத்துகளும் இருக்கிறது. இதனால், கீழ் உடல் பகுதியில் இருக்கும் தசைகளும், இடுப்பும் ஒல்லியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தர்பூசணி:

தர்பூசணி,  Melon பழ வகைகளுள் ஒன்றாகும். பொதுவாகவே, இந்த மெலன் பழ வகைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது. அது மட்டுமன்றி, இந்த பழங்கள், சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அதிக எடை கொண்ட நபர்களில் குறைந்த இரத்த அழுத்தத்தை இது தடுப்பதாக கூறப்பட்டுள்ளது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தொள தொள தசையை கல் போல வலிமையாக்க..‘இதை’ சாப்பிடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More