Home> Health
Advertisement

நாட்டிலேயே குறைந்த விலையில் ’சரக்கு’ கிடைக்கும் மாநிலம் எது? தெரிஞ்சா ஆச்சரியம் தான்!

Diseases And Liquor Rates: குறைந்த விலையில் மது கிடைக்கும் மாநிலம் எது தெரியுமா? புதுச்சேரியா? சான்ஸே இல்லை....  

நாட்டிலேயே குறைந்த விலையில் ’சரக்கு’ கிடைக்கும் மாநிலம் எது? தெரிஞ்சா ஆச்சரியம் தான்!

மகிழ்ச்சியைக் கொண்டாட மது அருந்துவது என்பதும், சோகத்தில் இருக்கும்போதும் மது உதவும் என்ற மனோநிலை அதிகரித்து வருவது கவலைக்கு உரிய மாபெரும் பிரச்சனையாக வடிவெடுத்து வருகிறது. அருந்தும் மது, இரத்தத்தில் நேரடியாக கலந்து விடுவதால் துரிதமாக மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை ஆக்ரமித்துக் கொண்டு நாளடைவில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தி சிறிது சிறிதாக நம்மை அழித்துவிடுகிறது. 

சுகாதார பிரச்சனைகள்

கல்லீரல் பாதிப்பு: மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் இறுக்க நோய் (Cirrhosis) ஏற்படுகிறது. கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே காரணமாகிறது.

குடல் பாதிப்பு: குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது.

தொற்றுநோய்கள்: மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் குணமாகாது.

புற்றுநோய்: வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.

கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப்புண், கணயத்தில் வீக்கம், புற்றுநோய், தொண்டை உணவுக்குழாய் மற்றும் குடல் சத்துக் குறைபாடுகள், உடல் வீக்கம், சர்க்கரை வியாதி, கை மற்றும் கால்கள் செயலிழப்பு, நரம்புத்தளர்ச்சி, மூளை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, இரத்த சோகை, ஆண்மையிழப்பு என அனைத்துவிதமான ஆரோக்கிய கேடுகளும் ஏற்பட மது அருந்துதல் காரணமாகிறது.

மனரீதியிலான பிரச்சனைகள்

தூக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், ஞாபக மறதி, வலிப்பு நோய் என மது அருந்துவதால் மனரீதியானப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

மேலும் படிக்க | Liquor Price Hike : டாஸ்மாக்கில் எந்த சரக்குக்கு என்ன விலை? விலை உயர்வால் தள்ளாடும் ’குடிமக்கள்’!

மதுவிலக்கு என்ற கொள்கை இந்தியாவில் இருந்த நிலை இன்று காலத்திற்கு ஏற்ப மாறிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மது விற்பனை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் லாபமே அரசுக்கு அதிக வருவாய் கொடுக்கிறது. அதிகமாக மது விற்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போடவும், அதிலிருந்து கிடைக்கும் வருமானமே காரணம்.

இருந்தபோதிலும், பீகார், குஜராத், மிசோரம், நாகாலாந்து, யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் மதுவிலக்கு (Alcohol prohibition in India) அமலில் உள்ளது. 

தமிழ்நாட்டில் டாஸ்மாக்

இந்தியாவில் குறைந்த விலையில் மது கிடைக்கும் மாநிலம் எது தெரியுமா? என்ற கேள்விக்கு அது தமிழகம் இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், டாஸ்மாக் (TASMAC) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம் ஆகும்.

தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கவும் அரசு நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை இருக்கிறது. இருந்தாலும், மது விற்பனை செய்வதில் குறைந்த விலை தமிழகத்தில் இல்லை. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் சரக்குகளின் விலை உயர்த்தப்பட்டது. 

மேலும் படிக்க | 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள்! ஆருடம் சொல்லும் பாஜக!

குறைந்த விலையில் மது விற்பனை

இந்தியாவில் மிக குறைந்த விலையில் மது விற்பனை செய்யப்படும் மாநிலம் என்றால், பலருக்கும் தமிழகத்தின் அண்டையில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியாக இருக்கும் என்று கருத்து இருக்கும். ஆனால், கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறதாம்.

கோவாவில் சரக்கு விலை

புதுச்சேரியை விடவும் கோவாவில் மது பான பாட்டில்களுக்கு மிகக்குறைந்த வரி விதிக்கப்படுகிறது. ஒரு உதாரணம் மூலம் பார்த்தால், கோவாவில் 100 ரூபாய்க்கும் விற்பனையாகும் மதுவின் விலை, டெல்லியில் 134 ரூபாய்க்கு விற்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்புக்கு வெளியே உள்ளதால்,  மதுவின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமாக இருக்கிறது. 

கோவாவில் மதுவின் விலை இந்தியாவிலேயே குறைவு என்றால், கர்நாடகாவில் மது பாட்டில்களுக்கான வரி மிக மிக அதிகமாக இருக்கிறது.

விலை அதிகம், ஜிஎஸ்டி அதிகம், ஆரோக்கியத்திற்கு தீங்கு என பல விஷயங்கள் இருந்தாலும், இந்தியாவில் மதுவிற்பனை சக்கைபோடு போடுகிறது. 

 மேலும் படிக்க | ஆட்டோ ஓட்டுநர்களுக்கான புதிய செயலி அறிமுகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More