Home> Health
Advertisement

கொரோனா பல மாதங்களுக்கு உடலில் இருக்குமாம்... பீதியை கிளப்பும் மருத்துவர்கள்..!!!

பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் SARS-CoV-2 , அதாவது கொரோனா வைரஸை மையமாகக் கொண்ட அராய்ச்சிகள் செய்யப்பட்டன. SARS-CoV-2 என்பது கொரோனா தொற்றுநோய்க்கு மூல காரணமான வைரஸ் ஆகும்.

கொரோனா பல மாதங்களுக்கு உடலில் இருக்குமாம்... பீதியை கிளப்பும் மருத்துவர்கள்..!!!

புதுடெல்லி: கொரோனா உலகம் முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகள் மீண்டும் லாக்டவுன் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்தியாவில் (India) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. 'தி லான்செட் மைக்ரோப்'  (The Lancet Microbe) பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கோவிட்-19 பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் 83 நாட்கள் வரை இருக்கக்கூடும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின்படி, கொரோனா (Corona Virus) பாதிக்கப்பட்ட நபரில் வைரஸ்  9 நாட்களுக்கு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் வெளிநாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆரய்ச்சியில், ​​உடலில் வைரஸ் சுமார் 3 மாதங்கள் வரை இருப்பது தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் (Britain) மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் SARS-CoV-2 , அதாவது கொரோனா வைரஸை மையமாகக் கொண்ட அராய்ச்சிகள் செய்யப்பட்டன. SARS-CoV-2 என்பது கொரோனா தொற்றுநோய்க்கு மூல காரணமான வைரஸ் ஆகும்.

ஆராய்ச்சி இணை ஆசிரியரும் மருத்துவருமான அன்டோனியோ ஹோ கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், வைரஸ் தொற்று சிறிதளவு பாதித்துள்ள நோயாளிகளுக்கு பொருந்தும் என கூற முடியாது. வைரஸ் தாக்குதல் குறைந்த அளவு உள்ளவர்களின் உடலில் இருந்து வைரஸ் விரைவில் வெளியேறி விடும்  என்று நிச்சயமாகக் கூறலாம் என்கிறார்.

தி லான்செட் மைக்ரோப் பத்திரிக்கையில் வெளியான அறிக்கையின்படி, கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு ஆரம்ப 5 நாட்கள் மிகவும் முக்கியம், எனவே அவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஒருமுறை நோய்த்தொற்று ஏற்பட்ட நபருக்கு, ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆராய்ச்சியின் முன்னணி எழுத்தாளர் டாக்டர் முகே செவிக் கூறுகிறார்.

ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More