Home> Exclusive
Advertisement

08-07-2018: முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

08-07-2018: முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

> மேலும் மேலும் மும்பையில் அசம்பாவிதம்! கட்டிடம் இடிந்து விபத்து!

மும்பையில் உள்ள குர்லா என்ற பகுதியின் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடம்  தீடிரென சரிந்ததில் தற்போது உயிர் சேதம் எதுவும் இல்லை.

> இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: அன்புமணி ராமதாஸ்

மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

> ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்த நடிகர் சிம்பு -புகைப்படம் உள்ளே!

இயக்குநர் ராதாமோகன் தற்போது இயக்கி வரும் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுடன் இணையும் சிம்பு! 

> கனமழை தொடரும்! மும்பையை எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

> மும்பையில் தொடரும் கனமழை! அவதியில் பொதுமக்கள்!

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

> ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முயற்சி தவறு -ஸ்டாலின்!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முயற்சி தவறு என்பது திமுக-வின் கருத்து என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்! 

> பயணிக்கு மாரடைப்பு! அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் விமானம் இந்தூருக்கு திருப்பி விடப்பட்டது. 

> Watch: தொடரும் கனமழை! இதுதான் தற்போது மும்பையின் நிலை!

மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

> 2 மாதங்களில் 70 மில்லியன் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்?

போலி கணக்குகள் மற்றும் வன்முறை தூண்டல்கள் போன்றவைகளில் ஈடுபட்ட 70 மில்லியன் கணக்குகளை 2 மாதங்களில் டிவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

> பேருந்தும் டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து: 12 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே ஒரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர்!

> ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது!! 

> NEET ஆண்டுக்கு ஒருமுறை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தல்!

ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!  

> இந்த முறை தமிழ் படம்-2 கையில் சிக்கியது காலா!!

தொடர்ந்து பல படங்களை கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வரும் தமிழ் படம் 2 படக்குழு தற்போது கமல், ரஜினியின் பக்கம் திரும்பி உள்ளது!

> FIFA _2018: ரஷியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது!

> அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் படித்து வந்த சரத் கோபு என்கிற இந்திய மாணவர் ஓட்டலில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

> தாய்லாந்தில் சுற்றுலாப்படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி

தாய்லாந்தில் சுற்றுலாப்படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது! 

> ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சிவகார்த்திகேயன் புதிய லுக் -Seepic!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய லுக் புகைப்படம் தற்போது சமூகவளைதலத்தில் வைரலாக பரவி வருகிறது! 

> 08-07-2018: இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!

Read More